BREAKING NEWS

பிரதமரையும் அழைத்து கொண்டு வீட்டு போய் சேருங்கள்” ஜனாதிபதிக்கு கோரிக்கை..

 


மக்களின் கஷ்டத்தை தீர்க்க முடியாத ஜனாதிபதியும் பிரதமரும் பதவியிலிருந்து நாட்டுக்கும்  மக்களுக்கு என்ன பலன்..?  நீங்களிருவரும் பெட்டி படுக்கைகளை கட்டிக் கொண்டு வீட்டுக்குப் போய் சேர்வது தான் உங்களுக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது..

ஆளுக்கு ஆள் பந்தை கடத்தாமல்  பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என மஹிந்த விசுவாசியான வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நோக்கத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டது.  மிகக் குறுகிய காலத்தில் அக்கட்சியைச் சுற்றி பெருந்திரளான மக்கள் திரண்டு 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பெரும் வெற்றிபெற வைத்தனர். அதன் பின்னர் 2019 ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நம்பிக்கையுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நாளுக்கு நாள் மக்களின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றத் தொடங்கினார். அதுதான் பிரச்சினையின் மூலம் . பெற்றோரைப் போல நேசித்த கட்சிகளை விட்டுவிட்டு அனைவரும் மொட்டு கட்சியில் சேர்ந்தனர்.  மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் இணைந்து கொண்டனர்.

 அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக தற்போது மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.  நாட்டின் தலைமைத்துவத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இன்று நாட்டில் பொருளாதார, அரசியல் ஸ்திரமின்மை தலைதூக்கியிருப்பது இரகசியமல்ல.

 ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதே சிறந்த முடிவு என ஜனாதிபதி கோட்டாபய நினைத்தால் அது விவசாயிகளுக்கு உரம் வழங்காமல் நாட்டுக்கு ஏற்பட்ட அழிவு போன்றது என உறுதியாக கூறமுடியும்.  இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் குழப்பத்தில் உள்ளன. மேலும் போராட்டக்காரர்கள் சொல்வது தவறு என ஆரம்பத்தில் நினைத்தோம். ஆனால் அது சரிதான் என்று இப்போது புரிகிறது.

 பிரதமர் மகிந்த ராஜபக்சவை செல்லுங்கள் என நாட்டு மக்கள் கூறியதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டது மக்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அல்ல, வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவே.  ஆனால் அவர் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த பிரதமரை அழைத்துக் கொண்டு ஜனாதிபதியை வீட்டிற்குச் செல்லுமாறு கூறுகிறேன், ”என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காவியன்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar