BREAKING NEWS

3 இலட்சம் பீப்பாய் ஒக்டேன் ரக பெட்ரோலை இறக்குமதி செய்வதற்காகவே கடன் பத்திரம்

 


பெட்ரோல் இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் . அதற்கிணங்க 3 இலட்சம் பீப்பாய் ஒக்டேன் ரக பெட்ரோலை இறக்குமதி செய்வதற்காகவே மேற்படி கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார் . பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மக்கள் வங்கியுடன் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட முக்கிய பேச்சுவார்த்தையையடுத்து 42.6 மில்லியன் அமெரிக்கன் டொலருக்கான கடன் பத்திரம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளது . அதற்கான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு இவ்வார இறுதியில் பெற்றோலை விநியோகிக்க‌ முடியும் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar