யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்துக்கு போக்குவரத்தை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகம் , திருச்சி விமான நிலையத்துக்கு விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அதேபோல காங்கேசன்துறையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . யாழ்பாணத்திலிருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டால் வடக்கு மக்களின் தமிழக போக்குவரத்து இலகுபடுத்தப்படுமெனவும் , தமிழக மக்களின் இலங்கைக்கான வருகை அதிகரிக்குமெனவும் நம்பப்படுகிறது .
Post a Comment