BREAKING NEWS

நிறைவேற்று *உயர்பீடத்தின்* விசேட கூட்டம்

 



நிறைவேற்று *உயர்பீடத்தின்* விசேட கூட்டம்  *29.05 2022* "புரியாணி தோப்பு" நிந்தவூரில் ; அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் *பேரவையின் தலைவர் - தேசபந்து. ஜலீல் ஜீ* தலைமையிலும், பொதுச் செயலாளர்- *விபுலமாமணி வீ. ரீ. சகா தேவராஜா* அவர்களின் வழிகாட்டலிலும் இடம்பெற்றது.


கலந்துரையாடலின் பின்னர்- *முக்கியமான சில தீர்மானங்கள்* நிறைவேற்றப்பட்டன.


01. கலைத்து விடப்பட்ட *உயர்பீட* புலனக் (வாட்ஸ்அப்) குடும்பத்தை  *நிபந்தனைகளுடன்*,  அவர்களின் விருப்பங்களுடனும் *மீண்டும்* குழுவினை உருவாக்குதல்.


02. கலைக்கப்பட்ட *நிறைவேற்று சபை* புலனக் (வாட்ஸ்அப்) குடுமத்தினையும், புதிதாக *செயற்பாட்டாளர்* வாட்ஸஅப் குழுமத்தினையும்  *நிபந்தனைகளுடன்*,  அவர்களின் விருப்பங்களுடனும் *மீண்டும்*  உருவாக்குதல்.


03.செயற்பாட்டுடன் கூடிய ஓர் *இணைப்பாளர், பிரத்தியேக செயலரை* எதிர்காலத்தில் நியமனம் செய்தல்.


04. உயர்பீட உறுப்பினர்களுக்கு முதலிலும், பின்னர் நிறைவேற்று சபை ஏனைய உறுப்பினர்களுக்கும் *பேரவையின் அடையாள அட்டைக்கான* செலவினைப் (450/) பெற்று விநியோகம் செய்வது.


05. உயர்பீட பிரதிநிதிகளுக்கு *நியமனச் சான்றுப் பத்திரம்* விழாவில் வழங்குதல்


06. இன்னும் முயற்சிக்கும் *முதன்மைப் பிரதி, கௌரவப் பிரதி* பெரும் இளம் புரவலர்களை இனங்காட்டும்  *நிறைவேற்றுச் சபை* உறுப்பினர்களுக்கு *இலவசமாக அடையாள அட்டை (I C)* வழங்குவது.


07. விழாவில் கவிதை வழங்கிய கவிஞர்கள், தனி, குழு நிகழ்ச்சி செய்வோர், கவிதை உரைக்கும் சிரேஸ்ட கவிஞர்கள், விருதாளர்கள் போன்றோருக்கு *தலைவர், செயலாளர் உட்பட மேலதிக அரசாங்க அதிபரின் ஒப்பங்களுடன்* பங்கேற்புச் சான்றிதழ் வழங்கல்.


08. *திருகோணமலை + அம்பாறை* மாவட்ட கலை-இலக்கிய ஆளுமைகளுடனான *விருது வழங்கல் , கலை-இலக்கிய சங்கமம்* நிகழ்வுக்கு எம்மிடையே தகைமையுடைய, அதேவேளை விருப்பமுடைய *20 பேரை* தெரிவு செய்து *கலைஞர் பரிமாற்றல்* நிகழ்வினை உடன் அமுல்படுத்துதல்.


09.*"அட்சயம்"* நூலின் அச்சு வேலைகள்- தடங்கல் காரணமாக புத்தகம் *ஜூலை மாத ஆரம்பத்தில்* தான் கிட்டும் என அச்சகத்தார் தெரிவித்துள்ளனர். ஆதலினால் *விழாவினை* எதிர்வரும் *13.07.2022 புதன் கிழமை* நடாத்துவது எனவும்


10. முப்பெருவிழா நெருங்கும் வேளையில்  *விழா தொடர்பான* குழுக்களின் *வாட்ஸ்அப் குழுவினை* தனி நபர்களின் விருப்பத்துடன், நிபந்தனைகளை *ஏற்றுக் கொண்டதன் பின்னர்* இணைத்து, நடைமுறைப்படுத்துவது எனவும் 

தீர்மானிக்கப்பட்டது.


 இவ்விசேட கூட்டத்தில் *தலைவர், பொதுச் செயலாளர்* உட்பட *துணைத் தலைவர்களான* ; கலாபூஷணம் அக்கரைப்பற்று நஜுமுத்தீன் சார், ஆலையடிவேம்பு குணாளன் சார், *துணைச் செயலாளர்*- கலாபூஷணம், அக்கரைப் பாக்கியம் சார், *கணக்குப் பரிசோதகர்*- கல்முனை-ஜூல்பிகா ஷரீப் மேடம், *ஆவனப் பதிவாளர்*- கல்முனை- மஜீதிய்யா மேடம், *அமைப்பாளர்*; அட்டாளைச்சேனை மன்சூர் சார் மற்றும் பேரவையின் *அனுசரணையாளர்*- கலாவிபூஷணம், நிந்தபதியான் சித்தீக் சார் ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.


தகவல்-

*பேரவையின் ஊடகப் பிரிவு.*

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar