பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் எதுவும் தெரியாவிட்டால், பிரதமருக்கும் எதுவும் தெரியாவிட்டால், ஏன் எதுவுமே தெரியாத பெசில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமித்தீர்கள் என எரான் விக்ரமரத்ன நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் உள்ள ஆளுங்கட்சி எம்.பிக்களில் ஒருவரை நியமிக்காமல் குடும்பத்தில் உள்ள ஒன்றுமே தெரியாத ஒருவரை நிதியமைச்சராக நியமித்த காரணத்தினாலேயே தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கூறியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேசையை தட்டி அந்த விடயத்தை வரவேற்றதாக தெரிவித்த எரான் விக்ரமத்ன எம்.பி, நீங்கள் வரவேற்ற அந்த விடயத்தை இந்த வாரமே நாடாளுமன்றில் முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு நீங்கள் நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை முன்வைப்பீர்களானால் அதனை அனைவரும் ஒன்றுசேர்ந்து நிறைவோற்றுவோம் எனவும் குறிப்பிட்டார்.
நீங்கள் அவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு ஒப்புக்கொண்டால், நாங்கள் நாளையே இந்த நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக குறிப்பிட் அவர், தங்களிடம் முறையான பொருளாதார திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனூடாக வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தாங்கள் தயார் எனவும் எரான் விக்ரமரத்ன எம்.பி குறிப்பிட்டார்.
Post a Comment