BREAKING NEWS

க‌ல்முனையில் மிக‌ச்சில‌ருட‌ன் ஜேவிபி ஆர்ப்பாட்ட‌ம்.





நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக  அம்பாறை மாவட்ட கல்முனை மாநகரத்தில் இன்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் தலைமையில் ஒரு சில‌ர் தீப்பந்தங்களை கையில் ஏந்திக்கொண்டு  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

கல்முனை பிரதான வீதி ஐக்கிய சதுக்க முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, தேசிய மக்கள் சக்தி பிரதேச அமைப்பாளர்கள், தேசிய மக்கள் சக்தி ஆதரவு இளைஞர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மிக‌ச்சில‌ரே க‌ல‌ந்து கொண்ட‌துட‌ன் த‌மிழ் பிழைக‌ள் கொண்ட‌ ப‌தாதைக‌ள் தூக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar