BREAKING NEWS

ராஜ‌ப‌க்ஷ‌ அர‌சை ஆத‌ரிக்க‌ சொன்ன‌வ‌ர் ஹ‌க்கீம். அமைச்ச‌ர் ஹாபிஸ் ஹ‌க்கீமை உரித்து த‌ள்ளுகிறார்.

 


தற்போதைய அரசாங்கத்துடன் தங்களை இணைத்து விட்டவர் தமது கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான் என்கிறார் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் . பிபிசி தமிழுக்கு பேசிய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் , " பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வீட்டிடுக்கு 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மிலிந்த மொரகொடவுடன் ( தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ) ஒரு தடவை சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் , அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து தனக்குத் தேவையா யான அனைத்து ஒப்பந்தங்களையும் செய்து முடித்தார் " என்றும் ஹாபிஸ் நசீர் தெரிவித்தார் . இதேவேளை அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றில் ஆதரவு வழங்குமாறு , நாடாளுமன்ற உறுப்பினர்களான தமக்கு தலைவர்தான் முஸ்லிம் காங்கிரஸ் கூறியதாகவும் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார் . ரஊப் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடைய வீட்டுக்கு 2020 ஒக்டோபர் 18 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ வந்து ஹக்கீமுடன் பேசியதாகவும் , அப்போது , தான் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கு இருந்ததாகவும் கூறிய ஹாபிஸ் நசீர் அஹமட் , " அதன்போது முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை ஆதரித்து நாடாளுமன்றில் வாக்களிப்பார்கள் " என்று , பசீல் ராஜபக்ஷவிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியதாகவும் தெரிவித்தார் . பசில் ராஜபக்ஷவுடனான அந்த சந்திப்பு பகல் 12.16 மணிக்கு ஆரம்பித்து 1.15 வரைக்கும் நடந்ததாகவும் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார் . " அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் நான் உரையாற்றிய போது , எமது கட்சித் தலைவர் மனச்சாட்சிக்கு அமைவாக வாக்களிக்குமாறு L எங்களுக்குக் கூறியுள்ளார் என கூறினேன் . அதனை தலைவர் ஹக்கீம் கேட்டுக் கொண்டிருந்தார் . நான் கூறியது பொய் என்றால் , அவர் என்னை இடைமறித்து , ' நீங்கள் 20 ஆவது திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் ' எனக் கூறியிருக்கலாமல்லவா ? அவர் அதனைச் செய்யவில்லை . காரணம் , அவரின் உத்தரவுக்கு அமைவாகத்தான் அன்று 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நாம் வாக்களித்தோம் " எனவும் அவர் தெரிவித்தார் . இவ்வாறு தம்மை அரசாங்கத்தின் பக்கம் செல்லுமாறு கூறி விட்டு , இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தன்னை குற்றப்படுத்திக் கூறுவது எந்த வகையில் நியாயம் எனவும் ஹாபிஸ் நசீர் கேள்வியெழுப்பினார் . 


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar