கட்சியிடம் பிராயச்சித்தம் தேடுவதை விடவும் அவர்கள் மக்களிடம் பிராயச்சித்தம் தேடுதல் வேண்டும். நாலு எம்பிக்களுக்கும் ஹக்கீம் வேண்டுகோள்.!
எதிர்வரும் 19ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய உடன் பிரதிசபாநாகரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடைபெறும். எதிர்க்கட்சியினர் பிரேரிக்கிற பிரதி சபாநாயகரை ஆதரிக்க வேண்டும் என நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவிடுகிறேன்.
இதனை குறுஞ்செய்தி மூலம் குறித்த நாலு பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிவிக்குமாறு கட்சியின் செயலாளரிடம் வேண்டுகிறேன்.
அவர்கள் அவ்வாறு வாக்களிக்கவில்லையாயின் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள். இது அவர்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம். இருந்தாலும் கட்சியிடம் பிராயச்சித்தம் தேடுவதை விடவும் அவர்கள் மக்களிடம் பிராயச்சித்தம் தேடுதல் வேண்டும்.
சம்மாந்துறையில் இன்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கலீல் எஸ் முஹம்மட்
Post a Comment