BREAKING NEWS

புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை





 புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை  படைத்த புத்தளம் பெருக்குவற்றான் அல்-மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள்

.........

2021-2022 கல்வி ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி புத்தளம் பெருக்குவற்றான் அல்-மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலை  வரலாற்றில் 5 பேர் ஒரே தடவையில் சித்தியடைந்துள்ளனர்.


M.W. M. அஸ்ஜத் 162, 
S.F.சல்மா 161,
M.H.M. ஹம்தி 158,
MR.F. றுஸ்தா 148,
M.F.மஹ்தியா 146 ஆகிய மாணவர்களே இவ்வாறு வெட்டுப்புள்ளி களுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

மேற்படி பாடசாலையில் தரம் 5ல் 22 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். இவர்களில் 20 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும் 2 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்று பாடசாலையின் 70 வருட வரலாற்றில் 100% சித்தியைப் பெற்றுள்ளனர்.

இவ்வெற்றிக்கு வழிகாட்டியவர் வகுப்பாசிரியை F.P.M. டொரின் மங்கலிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

* படத்தில் பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பாசிரியை உடன் சித்தியடைந்த மாணவர்களை காணலாம்


_எம்.எஸ்.எம். ஸப்வான்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar