BREAKING NEWS

எரிபொருளை தேவைக்கு அதிகமாக பெற்றுக் கொள்வதன் காரணமாகவே கியூ காண‌ப்ப‌டுகிற‌து.

  நாட்டில் அன்றாட பாவனைக்கு தேவையான எரிபொருள் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது . அதனை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன . எனவே நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார் .


 மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய மின்சக்தி அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார் .



நாட்டில் எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் , நுகர்வோர் தேவைக்கு அதிகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதன் காரணமாகவே கடந்த சில வாரங்களாக எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது . எனினும் தற்போது அந்த நிலைமையை படிப்படியாக சுமூகமடைந்து வருகிறது . ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேவையான எரிபொருளை உரிய முறையில் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது . தற்போது அவற்றை கப்பலிலிருந்து தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . அத்தோடு நாடளாவிய ரீதியில் எரிபொருளை நடவடிக்கைகளும் அதற்கமைய பகிர்ந்தளிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar