விமல் வீரவன்ச மற்றும் உதயன் கம்பன்பில ஆகியவர்களின் அமைச்சுப் பதவிகளை பரித்து அரசிலிருந்து வெளியேற்ற மைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அரசின் பங்காளிக் கட்சியான ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் சித்தீக் முகம்மது சதீக் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் முதல் இனவாத கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் போதித்து சிறுபான்மை மக்களை சிங்கள மக்கள் மத்தியில் மோசமான முத்திரை குத்தி பொது ஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து கொண்டு பொது ஜன பெரமுன கட்சியில் ஆதரவு அளித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களை இனத்துவேச கருத்துக்களை பரப்பி அரசை விட்டு வெளியேறும் அளவுக்கு மன உளைச்சல் உண்டாக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் கைத்தொழில் அமைச்சருமான விமல் வீரவன்ச மற்றும் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில போன்றவர்களை இந்த அரசிலிருந்து வெளியேற்றியது இந்த அரசு இனவாதம் அற்ற ஒரு அரசாங்கமாக அமைகின்றது என்பதை முஸ்லிம் சமூகத்துக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
அதேபோன்று கடந்த நல்லாட்சி அரசை விட இந்த அரசில் இனவாத செயற்பாடுகள் மிகவும் குறைந்த வண்ணம் உள்ளது. இவ்வாறான இனவாதக் கருத்துக்களை மக்கள் மத்தியில் புகட்டி இன நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் உண்டாக்கும் அரசியல்வாதிகளையும் அமைச்சர்களையும் இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெளியேற்றிய மைக்கு முஸ்லிம் மக்கள் மிகவும் சந்தோஷம் அடைகின்றார்கள். எதிர்காலத்தில் கௌரவ நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்கள் கூறியது போன்று தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் திட்டம் நிச்சயம் வெற்றி அளிக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அதேபோன்று இனவாதக் கருத்துக்களை உண்டுபண்ணி சிங்கள முஸ்லிம் தமிழ் உறவை சீர்குலைக்கும் அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் அனைவருக்கும் இந்த அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்பதை தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்
Post a Comment