BREAKING NEWS

விமல் வீரவன்ச , உதய கம்மன்பில ஆகியோருடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் .

 


அரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான விமல்  வீரவன்ச , உதய கம்மன்பில ஆகியோருடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் . தேர்தலுக்கு முன்னும் சரி , பின்னும்சரி இத்தகைய இனவாதிகளை எம்முடன் சேர்க்க மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவர் , ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எம்பி, சற்று முன்னர் தம்மிடம் உறுதியாக தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி , ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி

ஊடகங்களிடம் கூறினார் . இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது , அரசாங்கம் ஆட்டம் காண்கிறது . வரலாறு முழுக்க தமிழ் , முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதம் கக்கிய முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச , உத‌ய‌ய கம்மன்பில ஆகியோர் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் . இன்னமும் பலர் வெளியேற்றப்பட உள்ளனர் . இந்நிலையில் வழமைபோல் புதிய கூட்டணிகள் . புதிய நகர்வுகள் நிகழ்கின்றன .  


தமிழ் - முஸ்லிம் எதிர்ப்பு , இந்து - இஸ்லாம் கத்தோலிக்க எதிர்ப்பு என்ற இன , மத அடிப்படைவாதங்களை இலங்கையில் முன்னின்று ஸ்தாபனரீதியாக நடத்தியவர்கள் இவர்கள் மூவரும்தான் . அதை வரலாறு அறியும் . நான் நன்கு அறிவேன் . இந்த நிமிடம்வரைக்கூட திருந்தாத இவர்கள் இடம்பெறும் ஆட்சியில் இடம்பெற நான் தயார் இல்லை . இந்த நோக்கிலேயே எதிர்க்கட்சி தலைவர் , ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எம்பியுடன் நான் உரையாடினேன் . அதற்கு உரிய சிறப்பான பதிலை அவர் எனக்கு கூறியுள்ளார் . அதையிட்டு மகிழ்வடைகிறேன் . விமல் வீரவன்ச , உதய கம்மன்பில , ரத்தின ஆமதுரு இனவாத வினை விதைத்தார்கள் . இன்று ஊழ்வினை வினை அறுக்கிறார்கள் . " அறு தம்பி , அறு .. , நன்றாக அறு .. ! " என நாம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கத்தான் வேண்டும் . சிங்கள ஊடகங்களில் நான் இவர்களை பார்த்துக்கொள்வேன் என்றார் என‌ ம‌னோ க‌ணேச‌ன் கூறியுள்ளார்.

ஆனாலும் அதிகார‌ அர‌சிய‌ல்வாதிக‌ளின் வார்த்தைக‌ள் வேத‌ வாக்கு அல்ல‌ என்ப‌தும் உண்மை.


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar