#சந்தேகத்துக்கு #முற்றுப்புள்ளி #வைத்தார் #தலைவர்
(ஜெமீல் அகமட் )
பாராளுமன்ற உறுப்பினர் முஷ்ரப் மற்றும் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் மீதும் கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டிருந்த சந்தேகத்துக்கு நேற்று (18) முற்றுப்புள்ளி வைத்தார் தலைவர்
அதாவது அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுமாறு கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் தலைவர் உத்தரவிடவில்லை என்பதை நேற்று அட்டாளைச்சேனையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட செயல் குழு கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் தலைவர் மிகவும் தெளிவாக கூறினார்
பாராளுமன்ற உறுப்பினர் முஷ்ரப் அவர்கள் ஒரு இளைஞன் எதிர்காலத்தில் மிகவும் சிறந்த ஒரு அரசியல்வாதியாக வர வேண்டும் என தலைவர் ஆசைப்பட்டு பல விட்டுக்கொடுப்புக்களை செய்து மீண்டும் கட்சியின் முடிவுக்கு முஷ்ரப் வரவேண்டும் என தலைவர் செயல்பட்டதால் முஷ்ரப் தலைவர் இருவரும் நாடகம் ஆடுகின்றனர் என ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் ஆகியோர் பேசிக்கொண்டனர் ஆனால் அந்த பேச்சில் எந்த உண்மையுமில்லை என்பதை நேற்றைய தலைவரின் உரையின் மூலம் ஆதரவாளர்கள் முஷ்ரப் அவர்கள் தலமைக்கும் கட்சிக்கும் செய்த துரோகத்த் அறிந்துகொண்டு கவலையடைந்தனர்
ஆனால் தலைவர் நாடகம் ஆடவில்லை பாராளுமன்ற உறுப்பினர் முஷ்ரப் அவர்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி சத்தியங்களை மறந்து கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் தனது சுயநலனுக்காக அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிபிடதக்கது இந்த இடைநிறுத்தம் பாராளுமன்ற உறுப்பினர் முஷ்ரப் அவர்களின் மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வாழ்க்கை தொடருமா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் அமீர் அலி தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கொள்கை பரப்பு செயலாளர் ஜவாத் பிரதி தேசிய அமைப்பாளர் தாஹீர் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர்
Post a Comment