BREAKING NEWS

700 சிலிண்டர்கள் ஓட்ட‌மாவ‌டியில்.

 


எரிவாயுத்தட்டுப்பாட்டை நீக்க 700 சிலிண்டர்கள் வினியோகம் - ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜி


ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களில் நிலவும் எரிவாயுத்தட்டுப்பாட்ட நீக்க ஓட்டமாவடி வர்த்தக சங்கமும் ஓட்டமாவடி மரக்கறி உரிமையாளர் சங்கமுன் மேற்கொண்ட அயராத முயற்சியின் பயனாக 700 சிலிண்டர்களை இன்று முடிந்ததாக ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜி தெரிவித்துள்ளார். 


கடந்த ஓரிரு தினங்களாக எரிவாயுத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் வீதிகளில் அலைமோதித் திரிந்தையும் எரிவாயு களஞ்சியசாலைகள், விற்பனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் கவனத்திற்கொண்டும் ஆரம்பமாகவுள்ள புனித நோன்பு மற்றும் தமிழ்-சிங்கள புத்தாண்டைக் கருத்திற்கொண்டும் பிராந்திய வினியோகத்தர் மூலமாக நாம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். 


ஒரிரு தினங்களின் பின்னர் இன்று சுமார் 700 சிலிண்டர்களை வினியொகிக்க முடிந்ததுடன், ஒரு குறிப்பிட்ட தொகையினர் எரிவாயு கிடைக்காமல் திரும்பிச்செல்லும் பரிதாப நிலையும் ஏற்பட்டது.


எனவே, இனிவரும் நாட்களில் எரிவாயு வினியோகம் தொடர்பில் நேரடியாக விற்பனையாளர்களையும் பிராந்திய வினியோகத்தர்களையும் தொடர்பு கொள்ளுமாறும், வினியோகம் தொடர்பில் அவர்களே உத்தியோகபூர்வமாக பள்ளிவாயல்களிலோ அல்லது ஏனைய வழிகளூடகவோ அறிவிப்பார்கள் என்பதுடன், ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தின் பெயரில் உத்தியோகப்பற்ற செய்திகளைப் பரப்பி மக்களை அலைக்கழிக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்வதோடு, வர்த்தக சங்கத்தையும் அசெளகரியங்களுக்குள்ளாக்க வேண்டாமென கேட்டுக்கொள்கின்றேன். 


இன்றைய எரிவாயு வினியோகத்துக்கு உதவியளித்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்ளுக்கும் ஒத்துழைத்த ஓட்டமாவடி மரக்கறி உரிமையாளர் சங்கத்தின் முஹம்மது மக்கீன் மற்றும் எரிவாயு வினியோகத்தர், பிராந்திய முகாமையாளர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar