வேதாளம் மீண்டும் முருங்கையில்,
****************************************
சென் 27.02.2022 ஆம் திகதி முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி அவர்களது நிந்தவூர் இல்லத்தில் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறாப்பினர்களான சமேந்திரன். சாணக்கியன். கலைய்ரசன் ஆகியோர் எதிர் காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவு போன்ற விட்டம் க்கள் பற்றி பேசியுள்ளார்களென 28.02.2022 ஆம் திகதிய பத்திரிகைகளிலும் முக நூல்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமலை சன்முகா வித்தியாலய பர்தா உடை விவகாரங்கள் பத்தி எரிந்து தணல் ஆறுவதற்குள் அதைப்பற்றி கண்டன்ம் தெரிவிக்காத தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகள்து தமிழ் முஸ்லிம் உறவுக்கான பா லத்திற்கு அடிக்கல் வைத்து முதற் சுற்று பேச்சு நடந்துள்ளது,
எதிரியின் எதிரி நண்பன் என்பது இஸ்லாம் அங்கிகரிக்காத கோட்பாடாகும். இதை விளங்காத முஸ்லிம் பெயர் தாங்கிய புத்தி ஜீவிகள் தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முண்டியடித்து மூக்கை நுளைக்கின்றனர்.
ஆயுத போராட்ட காலத்தில் முஸ்லிம்களை பகைத்தனால் உலகிலயே முப்படையும் வைத்து போராடிய தமிழ் சமுகம் யுத்தத்தில் தோல்வி கண்டு போராட்டத்தை சீறோவால் பெருக்கி நிற்கிறது.
ஆயுதமேந்திய தன் மூலம் தவறிளைத்து லிட்டோமென பாராளுமன்றத்தில் சம்பந்தன் ஐயா அவ்ர்கள் வாய்விட்டு பேசுமளவுக்கு நொந்துபோயுள்ளார்.
மீண்டும் இந்தியாவின் காலில் தமிழ் சமுகம் தீர்வு தேடி வீழ்ந்து கிட்கின்றது.
16.07.1988 ல் ஹஸன் அலி அவர்களது நிந்தவூர் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் பேசும்போது
" வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டி போடுவதற்கும் வடகிழக்கு இணைப்பை நிரந்தர மாக்குவதற்கும் கோடிக்கணக்கான ரூபாய் அன்பளிப்புகள் இந்திய தூதுவர் டிக்சித் தர தயாராக உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் கூறியதாக அன்று சொனார்.
ரூபாய் 5 கோடி பணத்திற்காக இந்தியாவிடம் சோரம் போய் வடகிழ்கை இணைத்த துரோகம் 19.11.1988 ல் நடந்த வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் நடந்தேறியது.
இந்தியனின் பணத்திற்கு சோரம் போன இந்த வரலாற்று துரோகத்தை கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் பிறந்து வழர்ந்து சம்மாந்துறையில் வாழும் தபால்க ஊழியர் சகோதரர் புகாரி (JVP,) அவர்கள் தாக்கல் செய்த வழக்கு மூலம் இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டது யாவரும் அறிந்த சரித்திரமாகு.
அந்த இணைந்த வடகிழக்கு மாகாண சபை உருவாக்கத்தின் பின்புதான் எங்களது விரல்களால் எங்களது கண்களை குத்திக் கெடுத்தாற் போல 14.12.1989 ஆம் திகதியன்று அந்த வடகிழக்கு மாகாண சபையின் பின்புலத்தை வைத்து ஆயுத முனையில் சட்டவிரோத செயலகம் கல்முனையில் உருவானது. அப்போது ஹ்ஸன் அலி அவர்கள் மாகாண சபையில் எதிரணி உறுப்பினராக இருந்து மெளனம் சாதித்தார். இந்த சட்ட விரோத செயற்பாட்டை எதிர்த்தோ கண்டித்தோ ஒரு வார்த்தைதானும் பேசவில்லை.
வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிய கதையாக தமிழ் கூட்டமைப்பு எம்.பி கரளுடன் ஹஸன் அலி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஹாபிஸ் நஸீர் அவர்களை தமிழ் கூட்டமைப்பின் உதவியுடன் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக்கினார்கள். கேவலம் கடற்கரைபள்ளி வீதியென ஒரு வீதிக்கு மாநகர சபை அனுமதி வழங்கியும் அதை செய்ய முடியாத கையறு நிலையிலேயே ஒரு முஸ்லிம் முதலமைச்சரை பெற்று பெருமை அடைந்து ஏமாந்தது முஸ்லிம் சமுகம்.
மீண்டும் இந்திய ரோவின் ஆலேசனையுடன் டயஸ்போறாவின் பணமுடிச்சுடன் கிழக்கு மாகாண சபையிலும் வடக்கு மாகாண சபையிலூம் மாகாண சபை சட்டத்திற்கமைவாக பிரேரணைகளை நிறைவேற்றி முஸ்லிம் சமுகத்திற்கு கிழக்கு முதலமைச்சர் என்ற தங்கச் சப்பாத்துகளை பரிசளித்து அதை அணிய இயலாதவாறு கால்களை துண்டாக்கும் முஸ்லிம் முதலமைச்சர் என்ற எலும்புத் துண்டு பதவி வெறிகொண்டதுகளுக்கு முன்னால் தொங்கவிடப்படுகின்றது.
கூட்டாளி நாயுடன் புணர விரும்பினால் கூட போகும் கூட்டாளி வால் உயர்த்த வேண்டுமாம் என்றாற்போல கடந்த காலத்தில் ஹக்கீமின் பிழைகளுக்கு தணைபோய் பின்பு ஹகீமால் ஏமாளியாக்கப்பட்ட ஹஸன் அலி அவர்களை சுமேந்திரன் கூட்டம் மோப்பம் பிடித்து எதிர் காலத்தில் வடகிழக்கை இணைத்து முஸ்லிம் சமுகத்தில் மீண்டும் ஏமாளியாக்க கோமாளிகளை அணுகியுள்ளது.
தமிழர்களுடன் இணைந்து மாகாண சபையில் வெற்றி பெறும் வாய்ப்பு ஹஸன் அலிக்கு உண்டா என சிலர் சிந்திக்கலாம். முஸ்லிம்கள் அவருக்கு ஒரு வாக்ஙகத்தானும் போடாவிட்டாலும் தமிழர்கள் அவரை வெற்றிபெற வைப்பார்கள்.
1977 ல் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் பதியுதீன் முஹம்மது அவர்களை தோல்வியடையச் செய்யவென ஜ.தே.க. வில் போட்டியிட்ட பரீட் மீரா லெப்பைக்கு வாக்களித்தவர்கள் தான் தமிழர்கள் என்பது வரலாறு. எதிர்கால வடகிழக்கு இணைப்புக்காக அம்பாரை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்தாகுதல் ஹஸன் அலியை வெற்றிபெற வைப்பார்கள் தமிழர்கள்.
வடகிழக்கை இணைத்தல் கல்முனையை பிரித்து அதன் அடையாளத்தை பெறுமானத்தை சிதைத்தல் எனும் கைங்கரியத்தை செய்ய இன்று தமிழர்களுக்கு அவசரமும் அவசியமுமாக தமிழ் முஸ்லிம் உறவு எனும் அரசியல் சதி யின் அரங்கேற்றம் தேவைப்படுகின்றது.
கல்முனையில் ஒரு பிரதேச செயலகத்தில் ஒரு மிருக வைத்திய காரியாலயத்தில் ஒரு கூட்டுறவு சங்கத்தில் ஒரு காணிப் பணியகத்தில் ஒரு MOH காரியாலயத்தில் ஒன்றாக வாழ விரும்பாத தமிழர்கள் வடகிழக்கை இணைக்க முஸ்லிம்களை சம்மதிக்க வைக்க அரங்கேற்றப்படும் சதியே ஹஸன் அலி இல்லத்தில் நடந்த சதியாலோசனையாகும்.
கல்முனை யெனும் முஸ்லிம்களின் அடையாளத்தை எந்த சக்தியாலும் கூறுபோட இடமளியோம். அது எங்களது ஜனாஸாக்களால் நிரம்பி வளிந்தாலும் அதை கூறுபோட ஒருபோதும் அனுமதியோம்.
மாடு வாலை கிளப்பும் போது அறிவுள்ள வர்களுக்கு விளங்க வேண்டும் அது மறிக்கா அல்லது பேலயா என்று.
ஹாஜி நஸீர்
Post a Comment