BREAKING NEWS

பணத்தைப் பெற்றுக் கொண்டு 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்தது

 


மனச்சாட்சியுடன் சிந்திப்பவர்களுக்கு..! முடிந்தால் பதில் சொல்லுங்கள்..!       #பாகம்_1

தலைவர் அஷ்ரப் அவர்கள் மரணித்து 22 ஆண்டுகள் கடந்து விட்டது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்களுடைய சிந்தனையிலிருந்து கொள்கையிலிருந்து தூரமாகி விட்டது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஒரு மாமூல் அரசியலின் கூடாரமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாறிவிட்டது என்பதை என்னால் பல நூறு சம்பவங்களின் மூலம் விளக்க முடியும்.

18ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்ட கட்சியின் தலைமை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு கோடி ரூபாவை பகிர்ந்து அளித்தது.

அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஒரு கோடி ரூபா பணம் கிடைத்ததாக ஏற்றுக்கொண்டார்கள்.

இலங்கையில் அரசியல் அமைப்பு சட்டப்படி ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியாது.

18வது திருத்தச் சட்டத்தின்படி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதியாக வரலாம் என்பது......

 இப்பொழுது 20வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரங்களை விட,சொல்லப்போனால் அதை விடவும் அதிகமாக 18வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் சம்மதிக்காவிட்டால் 18வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அன்றைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பாராளுமன்றப்பலம் இருக்கவில்லை.

இந்த நேரத்தில் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் அவர்கள் ஆகக்குறைந்தது தலைவர் அஸ்ரபின் பெயருக்காக அவருடைய கொள்கைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக இருந்தால் கரையோர மாவட்டத்தையாவது பிரகடனப்படுத்த அரசாங்கத்தைக் கேளுங்கள் என்று விடாப்பிடியாக இருந்தார்.

ஆனால் நடந்தது என்ன..?

பணத்தைப் பெற்றுக் கொண்டு 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்தது....

இதை கண்ணால் கண்டு காதால் கேட்ட நான் தொடர்ந்தும் அந்தக் கட்சியில் எப்படி பயணிப்பது....


கட்சியை விட்டு உடனே விலகியிருந்தால் சொல்லியிருப்பீர்கள் அவசரப்பட்டு விலகிவிட்டேன் ...கொஞ்சநாள் இருந்திருக்கலாம் என்று...


போதுமான அளவு காலம் எடுத்து விலகி இருக்கிறேன் இப்பொழுது சொல்கிறீர்கள் இவ்வளவு நாளும் ஏன் பொறுமையாக இருந்தீர்கள்...என


இந்த இரண்டு முட்டாள்தனமான நிலைப்பாடுகளுக்கும் அப்பால் சமூகத்திற்கான அரசியல் என்பது அந்த சமூகத்துக்கான அரசியலாக இல்லாமல் தனிப்பட்ட சுயலாப அரசியலுக்காக இருந்தால் அது எந்த கட்சியாக இருந்தாலும் அது அழிக்கப்பட வேண்டிய ஒரு கட்சி தான்...


 இதுதான் என்னுடைய நிலைப்பாடு..


பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் அரசியலை மக்கள்மையப்படுத்தி ஒரு பாரிய புரட்சியை செய்வதற்கு பத்து வருடங்கள் போதுமாக இருந்திருக்கிறது...


இன்றைய தலைமைக்கு 25 வருடங்களை கொடுத்து விட்டீர்கள் இன்னும் எத்தனை வருடங்களில் கொடுக்கப் போகிறீர்கள் என்று தெரியவில்லை...


சில முட்டாள்கள் உடைய எழுத்துக்களை பார்க்கும் பொழுது வேதனை படுவதைத் தவிர வேறு வழியில்லை

Ranoos Muhammed

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar