BREAKING NEWS

13 வது சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரியுள்ளமையை வரவேற்கின்றேன்.

 


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கெளரவ.சம்பந்தன்  அவர்கள் மேதகு.ஜனாதிபதி கோத்தபாய அவர்களுடன் உரையாடி 13 வது சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரியுள்ளமையை நான் மகிழ்வுடன் வரவேற்கின்றேன்.

1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மேற்படி சட்டத்திருத்தமானது நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையை மாற்றி  இச்சட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டியது  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உருவாக்கமே ஆகும்.


2008 ஆம் ஆண்டிலே கிழக்கு மாகாண சபைக்கு நாம் வழங்கிய தலைமையேற்றலே  13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை மக்கள் மயப்படுத்தியது என்பது வரலாறு.

இன்று காலம் தாழ்த்தியாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 13வது சட்டத் திருத்தம் பற்றி பேச ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புதிதாக கைக்கொள்ள முனைகின்ற இந்த இணக்க அரசியல் போக்கு உளசுத்தியானதா? அல்லது கொழும்பு ஆட்சியாளர்களை சாதகமாக அணுகி காரியம் சாதித்து வரும் தமிழ் அரசியல் மாற்று சக்திகளை பலவீனப்படுத்தி ஓரங்கட்டுவதற்கான  நயவஞ்சகத்தனம் கொண்டதா? என்பதற்கு எதிர்காலமே பதில் சொல்லும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar