திருகோணமலை சண்முகா இந்து வித்தியாலயத்தில் அபாயா அணிந்து வந்தமைக்காக முஸ்லிம் ஆசிரியை இனவாத, பயங்கரவாத சிந்தனை கொண்டோரால் தாக்கப்பட்ட மனிதாபிமானமற்ற செயலை கண்டித்து ஐக்கிய காங்கிரஸ் கட்சியினால் இன்று புத்தளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எம் எஸ் எம் சப்வான் தலைமையில் நடந்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்
திருகோணமலை சன்முகா வித்தியாலயத்தில் அபாயா அணிந்த ஆசிரியை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டித்து பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
திருகோணமலை சண்முகா வித்தியாலய இனவாத தாக்குதலை கண்டித்து தமது கட்சியினால் தேசிய மட்டத்தில் மேலும் பல பிரதேசங்களில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததற்கிணங்க மன்னார், காத்தான்குடி புத்தளத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment