BREAKING NEWS

"ஒரே நாடு ஒரே சட்டம் ' ' ஜனாதிபதி செயலணியில் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

  "ஒரே நாடு ஒரே சட்டம் ' ' ஜனாதிபதி செயலணியில் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

 அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவிப்பு


( எம்.ஆர்.எம்.வசீம் ) 

 ' ஒரே நாடு ஒரே சட்டம் ' செயலணியின் விநியோகிக்கப்படும் தலைவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் முஸ்லிம்கள் தமது கருத்துக்களை ஜனநாயக ரீதியில் செயலணியில் முன்வைக்கலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உல‌மா  செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூர்ஹாமித் தெரிவித்தார் . 


மார்க்க விவகாரங்களுக்கான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று முன்தினம் கொழும்பு சாஹிரா கல்லூரியில் இடம்பெற்றது . இதில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் , ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி, நாட்டின் நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதொன்றாகும் . அதற்கு சில அதிகாரங்கள் இருக்கின்றன. அந்த குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருப் பவர் தொடர்பாக பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம் . முஸ்லிம் சமூகத்திலும் இதுதொடர்பாக பல்வேறு கருத்துடையவர்கள் இருப்பார்கள். அவர்களும் இந்த செயலணியில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல , யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்குமானால் ஜனநாயக ரீதியில் அந்த செயலணிக்கு சென்று அவர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் உரிமை இருக்கிறது. முஸ்லிம் மக்களிடம் நாங்கள் வேண்டிக்கொள்வது , உங்களுக்கு ஏதேனும் இந்த செயலணிக்கு சென்று கருத்து சொல்ல வேண்டுமானால் அது உங்களின் உரிமை. அதனை நீங்கள் தாராளமாக முன்வைக்கலாம். மேலும் இந்த செயலணி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அதனை தொகுத்து ஜனாதிபதிக்கே கையளிக்க இருக்கின்றது . அதனால் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களும் அதனை செயலணிக்கு முன்னால் தெரிவிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை . கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டி ருக்கும் இஸ்லாம் பாடப்புத்தகங்களில் ஒருசில விடயங்களை காலத்துக்கு ஏற்றவகையில் திருத்தம் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்து, அந்த புத்தகங்கள் மீளப் பெறப்பட்டிருக்கின்றன . அதில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என நாங்கள் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம். அதற்கு பொருத்தமான திருத்தங்களுடன் குறித்த புத்தகங்கள் பிள்ளைக‌ளுக்கு குறித்த‌ புத்த‌க‌ங்க‌ள் விநியோகிக்க‌ப்ப‌டும் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar