BREAKING NEWS

இஸ்லாமிய சமய பாடநூல்கள் திருத்தங்களுடன் மீள அச்சிடப்பட்டு வருகின்றன

 ( ஏ.ஆர்.ஏ.பரீல் )


 இஸ்லாமிய சமய பாடநூல்கள் திருத்தங்களுடன் மீள அச்சிடப்பட்டு வருகின்றன


. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து வாக்கு மூலங்கள் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் மற்றும் ' ஒரே நாடு ஒரே சட்டம் ' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமையவே இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ.என் . அயிலப்பெரும தெரிவித்தார் . இஸ்லாம் சமய பாட நூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் அப்பா ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிப் பதை உடனடியாக நிறுத்தும்படியும் , அப்பாட - நூல்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப் பட்டிருப்பின் உடனடியாக அவற்றை மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் அண்மையில் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் பாட நூல் நேரடியாக விநியோகிக்கப்படும் பாடசாலை அதிபர்களுக்கு சுற்று நிருபமொன்றினை அனுப்பி வைத்திருந்தார் . அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக் கையில் , பாட நூல்கள் மீளதிருப்பிப் பெற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது . ஏப்ரல் மாதத்துக்கு முன்பு புதிய பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப் படும் . கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு வொன்றின் பரிந்துரைகளுக்கமைய , கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் இஸ்லாமிய கற்கைகளுக்குப் பொறுப்பான முஸ்லிம் அதிகாரிகளின் சிபாரிசுகளின் படி இஸ்லாம் சமய பாடநூல்களில் திருத்தங்கள் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது . இவ்விவகாரம் தொடர்பில் கல்வி வெளியீட் டுத் திணைக்களத்தின் இஸ்லாமிய கற்கை களுக்குப் பொறுப்பான அதிகாரிகளில் ஒரு ஐ.ஏ.எம்.அப்சானைத் தொடர்பு வரான கொண்டு வினவியபோது அவர் பின்வரு மாறு தெரிவித்தார் . " இஸ்லாமிய சமய பாட நூல்களில் அடங்கி யுள்ள சில சர்ச்சைக்குரிய கருத்துக்களே திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன . பாட நூல்களில் அடங்கியுள்ள சில வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன . சில வசனங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன . இத்திருத்தங்கள் இஸ்லாம் பாடத்திட்டம் மற்றும் மார்க்கத்துக்குப் பாதிப்பில்லாத வகையிலே மேற் கொள்ளப்பட்டுள்ளன . அச்சகத்தில் ஒரு தொகை பாட நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன . அந்தப் பாட நூல்களில் திருத்தங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஏற்கனவே மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள பாட நூல்கள் மீளப்பெற்று களஞ்சியத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது . அந்நூல்கள்

மீண்டும் திருத்தங்களுடன் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படமாட்டாது . விஷேட உத்தரவுகளின்படியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . ஆனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இத்திட் டத்தை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது . 10 ஆம் , 11 ஆம் தரங்களுக்குரிய இஸ்லாம் சமய பாடநூல்களிலே பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . 6 ஆம் , 7 ஆம் தரங்களுக்குரிய  பாடநூல்களில் சில திருத்தங்களே  ஒரு மேற்கொள்ளப்பட்டுள்ளன . கருத்துக்கள் அடங்கிய அகற்றப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய க‌ருத்துக்க‌ள் அட‌ங்கிய‌ வசனங்கள் அக‌ற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ அல்லது மாற்றப்பட்டுள்ளன ' என்றார் . 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar