BREAKING NEWS

சூழ இருந்தவர்கள் ACMCஐ வளர்க்கவில்லை

 


சுயநலம் இல்லாத ஆலோசனை பொய்ப்பதில்லை

+++++++++++++++++++++++++

ACMC இன் தலைவரைச் சூழ அவர் அமைச்சராக உள்ள வரை பல வர்த்தக பிரமுகர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலர் இணைப்பாளர் பதவிகளையும் வகித்தனர். ஆனால் இவ்வாறு சூழ இருந்தவர்கள் ACMCஐ வளர்க்கவில்லை. தங்களின் தொழிற்துறைகளை வளர்த்துக் கொண்டனர். 

இன்று அவர்களில் 99.9 வீதமானோர் ACMC இன் தலைவரோடில்லை. 

பெரும்பாலும் அதிகம் பேர் கடந்த கால அனுபவங்களில் பாடங்கள் கற்றுக் கொள்வதில்லை. தற்போது இன்னுமொரு வர்த்தக குழுவினர் அவரை சூழ்ந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் தமது கட்சி வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்று கடந்த காலம் போல் ACMCஇன் தலைவர் நம்புகிறார். இந்த  வர்த்தகர்கள் தமது எதிர் கால வர்த்தக மேம்பாட்டுக்கு எல்லா அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் நெருக்கமாக இருக்கின்றார்கள். 

இத்தகையவர்களை கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தலையில் ஆடி சபையில் முதனிலையில் அமர வைத்து தமது தலைவரிடம் மேலதிக நற்சான்றுகளை கூறி தலைவரோடு பிணைத்து விட்டுள்ளனர். இதனை கிழக்கு மாகாணம் முழுவதிலும் காண முடிகிறது.

ACMCஇன் தலைவரிடம் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒருவரின் விசுவாசம் குறித்தும், அவர் எதிர் காலத்தில் எவ்விதமாக செயற்படுவார் என்றும் நானும் இன்னுமொரு நண்பரும் தெரிவித்தோம். ஆனால்  ACMC இன் தலைவர் அதனை நம்பவில்லை. நாம் சொன்னது மூன்று வருடங்களில் நடைபெற்றது. ஒரு தடவை தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்ட ACMCஇன் தலைவர் நாம் மூன்று வருடங்களுக்கு முன் சொன்னதை நினைவு கூர்ந்தார். அதனையே இன்றும் சொல்லுகிறோம். இந்த வர்த்தகர்கள் உங்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்று உறவு வைத்துக் கொள்ளவில்லை. தங்களின் எதிர் காலத்திற்கு பல இடங்களில் அத்திவாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ACMCஇற்கு இன்று வரை வலுவான கட்டமைப்பு கிடையாது. அதனால் கட்சியின் வளர்ச்சி என்பது தனிநபரிலேயே தங்கியுள்ளது. சிலர் கட்சியை வளர்ப்பதற்கு செய்யப்பட்டாலும் அவர்களிடமும், அவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களிடமும் அரசியல் நுட்பம் போதாமல் இருப்பதனால் ஒரு பக்கம் இணைத்துக் கொண்டு, மறுபக்கம் இழந்து கொண்டு வருகின்றனர். ஆதலால் ACMC இன் தலைவர் இதில் கவனம் செலுத்த வேண்டும். தன்னை சூழ வர்த்தகர்களை வைத்துக் கொள்வதில் தப்பில்லை. அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். சுயநலம் இல்லாத ஆலோசனை பெரும்பாலும் பொய்க்காது. ஒரு ஊடகவியலாளன் என்ற அடிப்படையில் எனது அவதானிப்புக்களை சொல்லியுள்ளேன்.  அண்மையில் SLMCஇன் தலைவரோடு நானும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீமும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசினோம். SLMC தலைவர் அரசியல் நகர்வுகளை குறிப்பிட்டார். கட்சி பற்றியும், முஸ்லிம் அரசியல் குறித்தும் எமது அவதானிப்புக்களை   அவரிடம் கூறினோம்.

- சஹாப்தீன்

24.02.2022

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar