BREAKING NEWS

தொலைபேசியினையும் தூக்காமல்,கிழக்கு வாசல் கதவையும் இறுக மூடி இழுத்துப் போர்த்திக் கொண்டு கோமாவில் இருக்கிறார்.



--------------------------------------------

அலறி 

அவர் ஒரு சாமானா ?

அவரிடமிருப்பது 150 வாக்குகள். அதாவுல்லாவுக்கு அது தேவையா? என்பது போன்ற முகநூல் பதிவுகளை இட்ட அன்பர்களுக்காக கட்சிமாறியதற்கான காரணத்தை விளக்க விரும்புகிறேன்


17000 வாக்குகளுடன் 2015 பொதுத்தேர்தலில் தோல்வியுற்று கிழக்கு வாசலில் அஞ்ஞாத வாசம் இருந்த சந்தர்ப்பத்தில் எனது 'கொலைப்பட்டியல், விலைப்பட்டியல், மு.கா தேசிய பட்டியல்' எனும் அரசியல் சார் நூல் வெளியீட்டு வைபவத்திற்கு அதிதியாக அழைத்து தோற்றிருப்பனுக்கு தோள்கொடுப்போம் என்ற எண்ணத்தில் அரசியல் பயணத்தில் அதாவுடன் கைகோர்த்தேன்


சுதந்திர கிழக்கு கூட்டங்கள்,பாலமுனை பிரகடனம் போன்ற அரசியல் நிகழ்வுகளில் அணி சேர்ந்து பணியாற்றினேன். அதன் பின் 2018 உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அவர் அதிகாரத்துடனும், ஆளும் கட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக  பதவிவகித்த காலங்களில் நடைபெற்ற 2006ம் 2011ம் ஆண்டுகளில் அடையமுடியாத உள்ளுராட்சி மன்ற உறுப்புரிமையை கல்முனை மாநகரசபையில் 1522 வாக்குகளுடன் அடைந்தோம்.நான் போட்டியிட்ட  4ம் வட்டாரத்தில் 4200 பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் அதில் SLMC வேட்பாளருக்கு,(ஓய்வுநிலை STF) 1100வாக்குகள்,ACMC வேட்பாளருக்கு(ஓய்வுநிலை GS)510 வாக்குகள் NC வேட்பாளரான  (LLB) எனக்கு 305 வாக்குகள் கட்சிகளுக்குத்தான் வாக்குகள் தனிநபருக்கல்ல மரத்தில் மாட்டைக் கட்டிப் தேர்தலில் போட்டியிட்டாலும் அதிக வாக்குகளை மக்கள் வழங்குவார்கள் என்னும் அரசியலின் அரிச்சுவடி தெரியாமல் எழுதும்,அவருக்கென்ன செல்வாக்கு அங்கிருக்கிறது எனக்கேட்கும் தறுதலைகள் புரிந்துகொள்ளட்டும் தே.கா கட்சி என்பது அக்கரைப்பற்றில் பிரபலமான 'அசோக்காட லேகியம்'என்பதையும் அறிந்துகொள்ளட்டும் அத்தாங்கு போட்டு சொந்தக்காசை செலவிட்டு பெற்றுக்கொண்ட உறுப்புரிமையை ஒரு வருட காலத்தில் நாணயமாக கட்சி வளர்ச்சிக்காக இராஜினாமா செய்தேன். 


அதன் பின் பதவியேற்ற அடுத்த உறுப்பினர் இதுவரைகாலமும் இராஜினாமா செய்யாமல் இரண்டாண்டுகள் கடந்த நிலையில் பதவி தொடர்கிறார்.கட்சி தலைமையின் கவனத்திற்கு இதனைகொண்டுவந்த பொழுது அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வராக பதவி வகிக்கும் மகன் அதாஉல்லா அஹமட் சக்கி வழிவிட்டு  அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் சகோ. எஸ்.எம். சபீஸ் அவர்களுக்கு வாய்ப்பை வழங்கி விடக்கூடாது என்பதற்காக கண்டுகொள்ளாமல் இதர கட்சிகள் போல சுழற்றி முறையில் வழங்காமல் இன்றுவரை இழுத்தடித்து வருகின்றார்.


இந்நிலையில் 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில் இருந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராகவும் (DCC) பதவியேற்று சமூகத்தின் நன்மைக்காக பங்காற்றுவார் என்ற நப்பாசையில் சக வேட்பாளர்களாக களமிறங்கி பாடுபட்டோம். ஆயினும் அவர் அணி சேர்ந்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP கூட்டு) அவரை ஒரு பொருட்டாக கருதவோ, மதிக்கவோ இல்லை. அமைச்சரவை அமைக்க தலதா மாளிகைக்கு அழைத்து,காக்க வைத்திருந்து அவமானப்படுத்தி அனுப்பினார்கள். 


அமைச்சருமில்லை, அந்தஸ்துமில்லை ஆக குறைந்தது மொட்டுக்கட்சிக்குள்  மரியாதையுமில்லை. இந்நிலையில் முஸ்லிம் சமூக்கத்திற்கு எதிராக 

1.ஜனாஸா எரிப்பு

2.முஸ்லிம் பிரமுகர்களின் கைது. 

3.இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை

4.மாடறுப்பு தடை

5.முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம்.

6. ஞானசார தேரரின் நியமனம்

7  சாய்ந்தமருது சபைக்கான வர்த்தமானி ரத்து என அடக்குமுறைகள் தொடரும் இந்த அரசாங்கத்தில் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதே அன்றிஅவரால் வாய் திறக்க முடியாத அவலம்.ஆனால் 1 இலட்சம் வேலைவாய்ப்பு,1இலட்சம்Km பாதை அபிவிருத்தி போன்ற சலுகைகள் சில அரசாங்கத்தால் வழங்கப்பட்டன 

20 நாள் முஸ்லிம் சிசுவை( covid-19 )எரித்த இந்த ஆட்சியாளர்களை இனியும் நியாயப்படுத்தினால் ,இணைந்து செயற்பட்டால் சமூகம் 'லூஸ் கலப்பில்லாத லூஸ் ' என எம்மை அழைக்கும் நிலை அரசியல் களத்தில் தெளிவாக தெரிகிறது 


கடைசியாக அமெரிக்காவுக்கு எதிரான சீனாவுக்கு ஆதரவான சில்லறை கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து சீனாவுக்கு ஆதரவாக பேச களமிறங்கியிருக்கிறார். ஆகக்குறைந்தது சமூகத்திற்காக பாராளுமன்றத்தில் உரத்து ஒரு சந்தர்ப்பத்திலும் பேசவில்லை. ஆனால் வெடில் பறியாமல் மான் சுடும் கதைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்கிறோம்


அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றை தாண்டி சாய்ந்தமருதின் தற்காலிக வாக்குகளை கழித்து அயலூர்களில் இருந்து நிரப்பமான வாக்குகளை கூட திரட்ட முடியாத நிலையில் அரும்பொட்டில் கருணாவின் கல்முனை விவகாரம் தொடர்பான கருணை வரவினால் தப்பி பிழைத்து MPயாக பதவிவகிக்கின்றார் 

காலத்திற்கு காலம் மஹிந்த புராணம் பாடிக்கொண்டு முஸ்லிம் சமூக அரசியல் ஒருபுறம் செல்ல தேசிய காங்கிரசும் அதன் தலைமையும் சமூகத்தினால் வரவேற்கப்படாத வழியில் சென்று இனியும் கரைசேரமுடியாது என்பது கண்கூடு


கட்சியின் போக்கில் மாற்றத்தை செய்ய வேண்டும் அன்றில் கட்சி கட்டமைப்பில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்ற கட்சிக்காரர்களின் கருத்தை சொல்வதற்கான

வாய்ப்பையும் வழங்காமல்,கலந்துரையாடல் எதனையும் மேற்கொள்ளாமல்

தொலைபேசியினையும் தூக்காமல்,கிழக்கு வாசல் கதவையும் இறுக மூடி இழுத்துப் போர்த்திக் கொண்டு கோமாவில் இருக்கிறார். அடுத்த கட்டத்தை நோக்கி கட்சி நகராமல் அக்கரைப்பற்றுக்குள்ளையே அடங்கி விடும், அல்லது அடக்கம் செய்யப்பட்டு விடும் நிலை தோன்றியுள்ளது. 


அதனால்தான் 

அருமை நண்பர்,அவரின் ஆஸ்தான ஆலோசகர் றிஸ்வான் (Riswan TFC) அடிக்கடி சொல்வது போல "பிறவியில் முடம் என்றால் ஏன் பேய்க்கு பரிசாரம் பார்த்துக்கொண்டிருப்பான்"அரசியல், கட்சி என்பதெல்லாம் அல்-குர்ஆன் ஆயத்துக்களா என்ன? அட்சரம் பிசகாமல் பின்பற்ற. சமூக அரசியலில் தோற்றுக்கொண்டிருக்கும் குதிரையை நம்பி பந்தயம் கட்ட முடியாது ,குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கவும் முடியாது என்ற யதார்தத்தில்



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத்பதியூதீனுக்கு ஒரு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அமைச்சுப்பதவி வகிக்காத காலத்தில் சேர்ந்திருக்கிறேன் 


அன்று

அதிகாரமிழந்திருந்த அதாஉல்லாவுடன் சேர்ந்தது போல


அவ்வளவுதான்

அஸ்ஸலாமு அலைக்கும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar