பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டனை அவர்களுக்கு வழங்கப்படும்

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சஜித் இன்று வழங்கிய உறுதிமொழி!


November 1, 2021

”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள், ஐக்கிய மக்கள் ஆட்சியின்கீழ் கண்டறியப்படுவார்கள். பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டனை அவர்களுக்கு வழங்கப்படும்.”- என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.


வத்தளையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.


”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நீதிக்காக காத்திருக்கும் மக்கள் கவலையில் உள்ளனர். அவர்களின் வலி எமக்கு புரிகின்றது.


ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புட்ட அனைவருக்கும் , நீதிமன்ற கட்டமைப்பின்கீழ் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். மன்னிப்பு என்பது கிடையாது.”- என்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்