மு.கா கட்சியின் தலைவர் பா உ ரவூப் ஹக்கீம் ஒரு சாணக்கிய அரசியல் தலைவர் என்பதற்கு மாறாக அசாணக்கிய தலைவர் என்ற பட்டத்தை பெறும் முயற்சி தானாகவே தன் தலையில் மண்ணைப் போடும் விடயமே இந்த கூஜா பேச்சு.
சில தினங்களாக தனது நான்கு சக முஸ்லிம் காங்கிரஸ் பா.உ கள் அரசுக்கு கூஜா பிடிப்பது பற்றி பேசுவது உண்மையில் வெறும் வேடிக்கையான பேச்சும் சமூகத்தை ஏமாற்றும் பேச்சாகவும் உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அனமையில் கிண்ணியா விஜயம் செய்து அந்த கூஜாக்களில் ஒருவரான பா.உ தௌபீக் குக்கு தேசிய அமைப்பாளர் வழங்கியது ஏன்? தற்சமயம் திடீர் என அந்த நான்கு பா.உ களை தாறுமாறாக ஊடகங்களில் திட்டித்தீர்ப்பதன் காரணம் என்ன என்பதை உடனடியாக சமூகத்திற்கு எடுத்து சொல்லவேண்டும் மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்.
இவர்கள் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாவிட்டால் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய இளம் தலைமைகளுக்கு இடம் கொடுத்து ஒரு புதிய யுகம் படைக்க முடியாதா? இன்று மு.கா கட்டமைப்பில் அடுத்த வரிசைகளில் எத்தனையோ சிறந்த ஆளுமைமிக்க நபர்கள் உள்ளார்கள் அவர்களை உடனடியாக பதவி வழங்கி சம்பந்தப்பட்ட 4 பா.உ களை புறம் தள்ளி விட வேண்டிய காலத்தை மழுங்கி கடத்திவிட்டு திடீர் என இந்த வேசம் யாரையும் சிந்திக்க வைக்க தோன்றும்.
முஸம்மில் மொஹிதீன்
தலைவர்
தேசிய விடுதலை மக்கள் முன்னணி NLPF
Post a Comment