அடுத்த சில மாதங்களில் கொரோனா இல்லாத நாடாக மாறப்போகும் இலங்கை-🇱🇰
இலங்கையில் அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றை ஒழிக்க முடியும் --- இலங்கை கொரோனா இல்லாத நாடாக மாற்றுவோம்.
--- சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தான் அதை உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி நாடாக மாறியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எல்லா நேரங்களும் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதைப் பிரதான பொறுப்பாகக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
2021-10-05
Post a Comment