மருதமுனை வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை மக்களுக்கு உடன் வழங்குமாறு நாமல் ராஜபக்ச உத்தரவு..

 


மருதமுனை வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை மக்களுக்கு உடன் வழங்குமாறு நாமல் ராஜபக்ச உத்தரவு..!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனைத் தொகுதி பொறுப்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களின் அழைப்பின் பேரிலும், அமைச்சரின் சட்ட ஆலோசகர் ஷிஹான் மஹ்ரூப் அவர்களின் ஒத்துழைப்புடனும்

மருதமுனை 65 M வீட்டுத்திட்டத்தில் இதுவரை பகிரப்படாத வீடுகளை விரைவாக பகிர்ந்தளிக்க விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று(13) நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்டதுடன் உடனடியாக அவ்வீடுகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு  நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பணிப்புரை வழங்கினார்.


இந் நிகழ்விக் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான WD.வீரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஷ, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல் பண்டாரநாயக்கா, கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், அமைப்பாளர்கள்,

பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


(M.M.U)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்