க
ல்முனை பிரதேசத்துக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீத் அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவரை நலம் விசாரித்தார். அத்துடன் அ.இ. மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் ஜவாதும் ஹக்கீமை சந்தித்துள்ளார்.
அண்மைக்காலமாக ரிசாத் பதியுதீனை விட்டு விட்டு ஜவாதின் உறவினரான வபா பாறூக் ஹக்கீமுக்கு ஆதரவாக எழுதி வருவதை பார்த்த போதே புரிந்தது ஜவாதும் வபாவும் ஹக்கீமுடன் சேரப்போகிறார்கள் என்பது.
இனி ரிசாத் பதியுதீன் தலை தூக்க முடியாது என்பதால் ஹக்கீம் பக்கம் இருக்கும் ஹரீசுக்கும் ஹக்கீமுக்கும் முரண்பாடு உள்ளதால் இவர்கள் ஹக்கீம் பக்கம் போக முயற்சிக்கிறார்கள் என்ற சமிக்ஞை வெளியாகியது.
இது ஒரு சாதாரண சந்திப்பு போல் தோற்றமளித்தாலும் இந்த போட்டோவை ஹக்கீம் தனது முகநூலில் போட்டுள்ளதன் மூலம் ஹரீசுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளார்.
Post a Comment