ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் ?

 


ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் , அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு : ' இஸ்லாமிய எமிரேட் ' எனவும் பெயர் மாற்றம்.


 புதிய பிரதமர் முல்லா முகம்மத் ஹசன் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களை

  அவர்கள் அறிவித்துள்ளனர் . இது தொடர்பாக தலைநகர் காபூலில் தலிபான் பேச்சாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு ஊடகவியலாளர்களைச் சந்தித்தார் . அப்போது அவர் இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார் . அதன் விவரம் வருமாறு ; அமைச்சர்கள் விவரம் பிரதமர் – முல்லா முகம்மத் ஹசன் அக்ஹுந்த் ( இவர் ஐ.நாடுகள் சபையின் கறுப்புப் பட்டியலில் உள்ளார் ) துணை பிரதமர் - மௌலவி அப்துல் கனீ பரதர் , சிராஜூதீன் ஹக்கானி - உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் ( இவர் ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன் - இந்த குழு அமெரிக்காவால் பயங்கரவாத  இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ) பாதுகாப்பு - மௌலவி யாகூப் ( இவர் தலிபான் நிறுவுநர் முல்லா ஒமரின் மகன் ) வெளியுறவு - ஆமிர்கான் முட்டாக்கி வெளியுறவு துணை அமைச்சர் - அபாஸ் ஸ்டானிக்ஸாய் தற்போது அறிவிக்கப்பட்டவர்கள் , முறைப்படி அராசங்கம் அமையும்வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்துவார்கள் என்று தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார் . இதேவேளை , ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்தை ( இஸ்லாமிய ஷரீஆ ) நிலைநாட்டுமாறு தலிபான் தலைவர் மௌலவி ஹிபத்துல்லா அக்ஹுன்ஸாதா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது . 


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்