காதி நீதிமன்றங்களை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து நிச்சயம் தேவை.
சுமந்திரன் எம்.பி
நாங்கள் கடந்த அரசியல் அரசியல் சாசணம் உருவாக்க முயற்சித்துக்கொண்டிருந்த போது பெருவாரியான முஸ்லிம் பெண்கள் பாராளுமன்றத்துக்கு வந்தார்கள்.
வந்த முஸ்லிம் பெண்கள் அனைவரும் காதி நீதிமன்றத்தை ஒழிக்க வேண்டும் என்றே கூறினர். ஆனால் முஸ்லிம் ஆண்கள் பலர், இல்லையில்லை, அது இருப்பது போன்றே இருக்கட்டும் என்றனர்.
முஸ்லிம் சமூகம் ஆணாதிக்கம் நிறைந்த சமூகமாக இருக்கிறது.
தேச வழமை சட்டத்தில் நான் இருக்கிறேன். அதிலும் குறைகள் இருக்கின்றன. பெண் சமத்துவம் அதில் இல்லை. அது திருத்தப்பட வேண்டும்.
ஆனால் முஸ்லிம் திருமண சட்டத்திலும் பெண்களுக்கு அநீதி உள்ளதால் அதனை திருத்துவது என்பதை விட இல்லாதொழிப்பதே நல்லது என்பது எனது கருத்து.
ஆகவே காதி நீதிமன்றங்களை வைத்துக்கொண்டு அதைத்திருத்த முடியாது.
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம் பி சுமந்திரன் அவர்கள் 18.9.2021 முகநூல் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.
தொகுப்பு. முபாறக் அப்துல் மஜீத்
Post a Comment