வாழைச்சேனை ஹாஜியார் வீதி இரண்டு கோடியே முப்பத்தெட்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு

 


அரசாங்கத்தின் "சுபிட்ஷத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தின் ஓர் அங்கமான ஒரு இலட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத் தலைவருமான அல்ஹாஜ் அல்ஹாபில் கௌரவ நசீர் அஹமட்  அவர்களின் முயற்சியின் பலனாக கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை ஹாஜியார் வீதி (செம்மனோடை) சுமார் இரண்டு  கோடியே முப்பத்தெட்டு இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (12) பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்களினால் வைபவ ரீதியாக அடிக்கல் நடப்பட்டது. 

இன்றைய அடிக்கல் நடும் நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களான ஏ.எல்.எ.கபூர், அஸ்மி, எம்.அன்வர், ஜெசிமா, மாஜிதா, சுபைதா (வட்டார மாதர் சங்க அபிவிருத்தி குழு தலைவி), ஏறாவூர் நகரசபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ. தஸ்லிம், ஜவாத் டயிலர், மெளலவி பி.எம்.தாஸிம், அன்சார், YSO ஹனிபா மற்றும் ஊர் பிரமுகர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கொவிட் 19 காரணமாக சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொண்டு இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்து..

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்