காதி நீதிமன்ற முறைமையையோ , முஸ்லிம் விவாக , விவாகரத்துச் சட்டத்தையோ இல் லாமற் செய்ய வேண்டாம் . மாறாக காதி நீதி மன்ற கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக் கைகளையே முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி , பிரதமர் மற்றும் நீதியமைச் சரைக் கோரும் மனுவொன்று தற்போது முஸ்லிம் சமூகத்தினால் கையொப்ப வேட் டைக்கு விடப்பட்டுள்ளது . முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இம்மனுவில் 2500 கையொப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன . குறிப்பிட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள - தாவது , காதி நீதிமன்ற கட்டமைப்பில் மாற் றங்களைச் செய்வதற்காகவும் , முஸ்லிம் விவாக , விவாகரத்து சட்டத்தில் குர்ஆனிய சட்டங்களை மாற்றியமைப்பதற்கும் அமைச் சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டு தற் போது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . அத்தோடு முஸ்லிம்கள் பொதுச் சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்து கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சில முஸ்லிம் பெண்களின் கோரிக்கைக்கு அமைவாகவே இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன் வைத்தவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமாகும். ஐரோப்பிய நாடுகளின் பணத்துக்காக ஆடும் சில பெண்களின் கோரிக்கையை ஏற்றே ஹக்கீம் இதனை முன்வைத்தார்.
அவருக்கு ஆதரவாக வை எம் எம் ஏ போன்ற மார்க்கம் தெரியாதோரும் வக்காலத்து வாங்கினர்.
எக்காரணம் கொண்டும் முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைக்க வேண்டாம் என சொன்னவர் முபாறக் அப்துல் மஜீத் மட்டுமே.
கடந்த நல்லாட்சியில் இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்த போது மவுனமாக இருந்த முஸ்லிம்களும், அமைப்புக்களும் இப்போது முழித்துள்ளனர்.
Post a Comment