BREAKING NEWS

எம்.பிக்கள் பொய் கூறி சமூகத்தை மீண்டும் ஏமாற்ற முனையக்கூடாது

 இப்போதைக்கு அமைச்சுக்கள் தருவதாக அரசாங்கம் கூறவில்லை.A.L. Thavam

******* ******* ******* ******* ******* ******* 

✅ 20க்கு கையுயர்த்துவதற்கு முன்னர் - பசில் ராஜபக்சவை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களிடம் - மாகாண சபை தேர்தல் முடியும் வரை அமைச்சுக்கள் வழங்கப்படாது என தெளிவாக கூறியிருந்தார்.

✅ சகோ. றிசாட்டை தனிமைப்படுத்தி - அவரது கட்சியுள்ளவர்களை காவுகொள்ளும் பொருட்டு “போர்ட் சிட்டி சட்ட மூல” வாக்கெடுப்பிற்கு முன்னர் - அ.இ.மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான அரச சந்திப்பில் - அமைச்சு பதவி வழங்குவோம் என கூறப்பட்டது. அது எப்போது எனக்கூறப்படவில்லை.


✅ சகோ.அதாவுல்லாவை பொறுத்த வரை - அவருக்கு எச்சந்தர்ப்பத்திலும் அமைச்சு பதவி வழங்குவோம் என உறுதியாகக் கூறப்பட்டிருக்கவில்லை. அதனால், அவர் அதில் ஈடுபாடும் காட்டவில்லை. இப்போதைக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாரை திட்ட மேற்பார்வை எம்.பியாக நியமணம் பெற்று சில சலுகைகளை மட்டும் அவர் பெற்றுக்கொண்டிருக்கிறார் (ஒரு அமைச்சராக இருந்தவர் இவ்வளவு சீப் ஆக போயிருக்க வேண்டியதில்லை என்பது வேறு கதை).


விடயங்கள் இப்படி இருக்க - 20க்கு கையுயர்த்தி #சமூகத்தின் #நம்பிக்கைக்கு #துரோகமிழைத்த #பாவத்தை #மறைப்பதற்கு - “20க்கு கையுயர்த்திய நாங்கள் அமைச்சு பதவிகளை எடுக்கவில்லை” என கூறி - மீண்டும் சமூகத்தை ஏமாற்ற 20க்கு கையுயர்த்திய எம்.பிக்கள் முயற்சிக்கக்கூடாது.


20க்கு கையுயர்த்தியதால் #கட்சிகளுக்கும் #தலைமைகளுக்கும் #செய்த #துரோகத்தைத்தான் - கட்சிகளும் தலைமைகளும் #மன்னித்திருக்க #முடியுமே #தவிர (அதுவும் ஏகமனதாக அல்ல) - சமூகத்திற்கு செய்த துரோகம் இன்னும் கணக்குத் தீர்க்கப்படாமல் எஞ்சியே இருக்கிறது. 


#நாய்க்கு #போடும் #பிஸ்கட்டுக்கு ஒப்பான அரை / கால் அமைச்சுக்களை இப்போதைக்கு நாங்கள் எடுக்கவில்லை எனக்கூறி - அதனை தியாகமாகக் காட்ட முனையும் 20க்கு கையுயரத்திய முஸ்லிம் எம்.பிக்கள் - முஸ்லிம் சமூகத்திற்கு கீழ்வரும் அநியாயங்கள் நடக்கும் போது - #அரசாங்கத்தோடு #தேனிலவு #கொண்டாடிக்கொண்டு எதை பிடிங்கிக்கொண்டிருந்தீர்கள் என்பதையும் பகிரங்கமாக கூறுங்கள்.

✅ அநியாயமாக ஜனாஸாக்கள் எரிக்கப்படமை

✅ பொலிஸ் நிலைய HQI & OICக்களாக இருந்த முஸ்லிம்களை பதவி நீக்கியமை

✅ முஸ்லிம் அரசியல்வாதிகளை PTAயின் கீழ் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமை

✅ முஸ்லிம் சட்ட / மார்க்க புலமையாளர்களை  PTAயின் கீழ் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமை

✅ தீவிரவாதத்தோடு சம்மந்தப்படாத இஸ்லாமிய அமைப்புக்களையும் கூட தடைசெய்துள்ளமை

✅ தேர்தல் முறைமை மீள் பரிசீலனை தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகளையே உள்வாங்காமை

✅ எல்லை நிர்ணயக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை உள்வாங்காத

✅ இஸ்லாமிய நூல்களை கொண்டு வருவதை தடைசெய்துள்ளமை

✅ புர்காவை தடைசெய்தமை

✅ மத்ரசாக்களில் கைவைக்க முயற்சிக்கின்றமை 

✅ புதிய பள்ளிவாயில்கள் பதிவுகளை தடைசெய்துள்ளமை

✅ நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் எவரையும் புனர்வாழ்வு என்ற பெயரில் கைது செய்யும் சட்ட ஏற்பாட்டை கொண்டு வந்துள்ளமை

✅ விவாக விவாகரத்து சட்டத்தை ஒழிக்க / சிதைக்க  முயற்சிக்கின்றமை

✅ தேர்தல் சட்­டங்கள் மற்றும் நடை­மு­றை­யி­லுள்ள தேர்தல் முறை­மையை மறு­சீ­ர­மைப்­ப­தற்­காக - அர­சாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட நிபுணர் குழு­வில் ஒரு முஸ்லிம் கூட உள்வாங்கப்படாமை

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar