15 வருடங்களுக்கு மேலாக அரசியல் களத்தில் உள்ள எமது கட்சி ஏன் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவில்லை, ஏன் உறுப்பினர் பெறவில்லை
என்பது பலரின் கேள்வி.
நாம் கட்சி ஆரம்பித்ததன் பிரதான நோக்கம் மக்களுக்கு உண்மையான அரசியல் விழிப்பூட்டுவதற்கும், நேர்மையான அரசியலை காட்டுவதற்குமேயாகும்.
அதன் படி முஸ்லிம் கட்சிகளின் தவறுகளையும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் துரோகங்களையும் சமூகத்துக்கு பகிரங்கமாக சுட்டிக்காட்டி அரசியல் விழிப்பூட்டவே இக்கட்சியைபயன்படுத்தினோம். அதில் கனிசமான வெற்றியும் கண்டோம்.
இன்று முஸ்லிம்களின் ஓட்டுப்பெற்ற முஸ்லிம் கட்சிகள் எம்மை 20 வருடங்களாக ஏமாற்றி விட்டார்கள் என்று மக்கள் புலம்புவதன் மூலம் எமது கருத்துக்கள் புரிந்து கொள்ளப்பட்டு வருகின்றன.
2001ம் ஆண்டு 11 எம்பீக்களுடன் இருந்த ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் இன்று 5 பேருடன் இருக்கிறது. இதற்கு பிரதான காரணம் அக்கட்சியின் துரோகங்களை சுட்டிக்காட்டி நாம் வெளியிட்ட ஆயிரக்கணக்கான அறிக்கைகளாகும்.
அதே போல் தேசிய அரசியலில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை ஒரு கட்சியாக நாம் வழி காட்டினோம்.
சிறுபான்மை கட்சி எவ்வாறு தேசிய அரசியலில் தூர நோக்கோடு செயற்பட வேண்டும், எவ்வாறு தேசிய கட்சிகளுடன் சமூகத்துக்கான ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதையும் நாம் ஒரு கட்சியாக இந்த 15 வருடத்தில் செயற்படுத்தி காட்டினோம்.
1. 2005 ஜனாதிபதி தேர்தலே எமது கட்சி முகம் கொடுத்த முதலாவது தேர்தலாகும்.
அதில் நாம் இந்நாட்டின் சிங்கள மக்கள் அதிகம் நேசிக்கும் வேட்பாளர் யார் என்று ஆராய்ந்தோம். யார் யுத்தத்தை முடித்து முஸ்லிம்களுக்கு சுதந்திரத்தை தருவார் என ஆராய்ந்தோம்.
ஒரு பக்கம் ரணில் மறு பக்கம் மஹிந்த ராஜபக்ஷ.
நாம் மஹிந்தவிடம் நெருங்கி எமது ஆதரவை தருவதற்காக கட்சிக்கான எந்த பதவியையும் முன் வைக்காமல் சமூகத்துக்கான 4 கோரிக்கைகளை மட்டும் முன் வைத்தோம்.
1. யுத்தத்தை முடித்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.
2. இஸ்லாம் சமய பாடத்துக்கென மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும்.
3.பள்ளிவாயலில் பணி புரியும் இமாம் முஅத்தின்களுக்கு அரச சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
4. சமாதான பேச்சுவார்த்தையில் உலமா கட்சியும் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தை மஹிந்த ஏற்றார். நாம் அவரை ஆதரித்தோம்.
ஆனால் மக்கள் ஓட்டுப்பெற்ற முஸ்லிம் கட்சிகள் எவ்வளவு பணம், அமைச்சுப்பதவிகள், சேர்மன் பதவிகள், கொந்தராத்து என்பவற்றை முன் வைத்த அரசுகளுக்கோ எதிர் கட்சிக்கோ ஆதரவளித்தனர்.
இந்த துரோகத்தை மாற்றும் வகையில் சமூகத்துக்கான நிபந்தனைகளை மட்டும் கொடுத்து ஒப்பந்தம் செய்து ஆதரித்த ஒரே கட்சி என்ற வழி காட்டலையும் நாம் செய்தோம்.
அதற்கிணங்க மஹிந்த ஜனாதிபதியான போது 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்தது. 2010ல் 150 மௌலவிமாருக்கு மௌலவி ஆசிரிய நியமனம் கிடைத்தது.
மறைந்த அஷ்ரப் 1994 முதல் 2000 வரை அமைச்சராக இருந்தும் ஒரு மௌலவிக்கேனும் நியமனம் வழங்க ஏற்பாடு செய்யவில்லை.
அ.இ. மக்கள் காங்கிரஸ் 2004 முதல் அதாவுல்லா காங்கிரஸ் 2004 முதலும் அரசாங்கத்தில் இருந்தும் அமைச்சர்களாக இருந்தும் இதற்கு முயற்சி எடுக்கவில்லை.
எனவேதான் எமது கட்சி மக்களின் ஓட்டுக்களை எடுக்க வேண்டும் என ஓடாது மக்கள் பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தியது.
ஓட்டுக்களை பெற்றவர்கள் பதவிகள் பெற்று சமூகத்தின் மானத்தை கப்பலேற்றிக்கொண்டிருக்கும் போது நாம் பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போகாமல் ஓட்டுக்களை கருத்தில் எடுக்காமல் மக்களுக்காக அரசியல் செய்தோம். சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளையும் வெளிக்கொணர்ந்தோம்.
இத்தகையதொரு நேரிய அரசியல் வழிகாட்டலை எமது கட்சி மட்டுமே செய்தது, இன்னமும் செய்கிறது.
Mubarak Abdul Majeed
United Congress Party
24.8.2021
Post a Comment