மீண்டும் கோத்தாப‌ய‌ அடுத்த‌ ஜனாதிப‌தி வேட்பாள‌ர்.

 


மீண்டும் ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிடுவதற்கான தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதியாக உள்ளதால்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் குறித்து ஆராயவேண்டிய தேவையில்லை- எனக்கு வாரிசு அரசியலில் நம்பிக்கையில்லை – நாமல் 


இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதனால் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து ஆராய்வது கருத்துக்களை வெளியிடுவது அவசியமற்ற செயல்  என அமைச்சர் நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.


சண்டேஒப்சேவருக்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை எதிர்கட்சியினரின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அவர்கள் இது உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவிக்கின்றனரே என்ற கேள்விக்கு அவர்கள் இது குறித்து கவலைப்படவேண்டிய தேவையில்லை எனக்கு என்னை பார்த்துக்கொள்ள தெரியும் என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்ற ஊகங்கள் உண்மையா என்ற கேள்விக்கு – வாரிசு அரசியல் அல்லது அரசியலில் முன்அனுமானம் போன்றவை எதிர்காலத்தில் பலன் அளிக்கப்போவதில்லை என எப்போதும் கருதுபவன் நான் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக நான் இது குறித்து பதிலளிக்கவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆனால் இந்த சூழலில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிடுவதற்கான ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார் இதன் காரணமாக நாங்கள் இந்த தருணத்தில் இது குறித்து ஆராயவேண்டிய அவசியமில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிடுவதற்கான தகுதி உள்ள ஒருவர் உள்ளதால் இவ்வாறான விடயங்கள் பற்றி பேசுவது அவசியமற்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்