முச‌லியில் கொரோனா த‌டுப்பூசி வ‌ழ‌ங்க‌ளில் ஒரு த‌லைப்ப‌ட்ச‌ம். இன்று முசலி வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட CORONA தடுப்பூசி முசலியில் உள்ளவர்களுக்கு மாத்திரம் தான் வழங்கப்படும் என்றும் புத்தளத்தில் வசிக்கின்றபோது  அடையாள அட்டை பெற்ற‌வர்க‌ளுக்கு  தடுப்பூசி வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் த‌டுத்த‌தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி க‌ண்டித்துள்ள‌து.

 இன்று முச‌லியில் த‌டுப்பூசி வ‌ழ‌ங்குவ‌தாக‌ ம‌க்க‌ள் அழைக்க‌ப்ப‌ட்ட‌போது அடையாள‌ அட்டையின் முக‌வ‌ரி வேறாக‌ இருந்த‌ போதும் தாம் வாழ்வ‌து முச‌லியில் என்ப‌தை கிராம‌ சேவ‌க‌ர் மூல‌ம் உறுதிப்படுத்திய‌ போதும் த‌டுப்பூசி வ‌ழ‌ங்காமை அதிகாரிக‌ளின் த‌வ‌றாகும்.


 இது விட‌ய‌த்தில் ம‌க்க‌ள் சார்பாக‌ நின்ற‌ கிராம‌ சேவை அதிகாரிக‌ளும், அதிகாரிக‌ளால் க‌ண்டிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

ஆக‌வே முச‌லியில் வாழ்வ‌தை உறுதிப்ப‌டுத்தும் அனைத்து ம‌க்க‌ளுக்கும் த‌டுப்பூசி வ‌ழ‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்