இத்தால் சகலரும் அறிய.
முஸ்லிம் உலமா கட்சியின் உத்தியோகபூர்வ பெயராக ஐக்கிய காங்கிரஸ் கட்சி என்பதை அறிவிக்கும் சத்தியப்பிரமாணம்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் முஸ்லிம் உலமா கட்சி என்ற பெயரில் இலங்கையின் ஜனநாயக அரசியல் செயற்பாட்டில் உள்ள எமது கட்சியின் உத்தியோக பெயராக "ஐக்கிய காங்கிரஸ் கட்சி" என இத்தால் அறிவிக்கிறோம்.
2005ம் ஆண்டு முதல் முஸ்லிம் உலமா கட்சி என்ற பெயரில் இயங்கிவரும் எமது கட்சியை ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாக அறிவிக்கும் படி 2006ம் ஆண்டு தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தோம்.
அதனைத்தொடர்ந்து பல தடவை பதிவுக்காக முயற்சி செய்தோம்.
கடந்த 2020ம் ஆண்டில் விண்ணப்பித்த 120 கட்சிகளுக்குள் தேர்தல் ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்ட 20 கட்சிகளுக்குள் எமது கட்சியும் உள்ளடக்கப்பட்டதானது எமது கட்சியின் செயற்பாட்டுக்கு கிடைத்த அடையாளமாகும்.
ஆனால் அப்போதிருந்த தேர்தல் ஆணையாளர் திரு. மஹிந்த தேஷப்பிரிய அவர்கள் எமது கட்சியின் பெயரில் உள்ள உலமா என்பதை நீக்கிக்கொள்வது நல்லது என்பதை தனது ஆலோசனையாக எம்மிடம் முன் வைத்தார்.
இதனை நாம் ஏற்று அந்த மாதமே எமது உயர் சபையை கூட்டி ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸ் என எமது கட்சியின் பெயரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக முடிவு செய்து அந்த அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் நேரடியாக ச்மர்ப்பித்தோம்.
பின்னர் 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற எமது கட்சியின் விசேட உயர் சபைக்கூட்டத்தின் போது இது சம்பந்தமாக தலைவரால் விளக்கம் தரப்பட்டது. அதன் படி எமது கட்சியின் உத்தியோக பெயராக "ஐக்கிய காங்கிரஸ் கட்சி" என்பதை சபை தீர்மானித்து அதனை எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அறிவித்தோம்.
ஆகவே எமது கட்சியின் உத்தியோக பெயர் என்பது "ஐக்கிய காங்கிரஸ் கட்சி" என்பதாகும் என்பதை இத்தால் தேர்தல் திணைக்களம் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன்.
நன்றி
இவ்வண்ணம்.
ஸாஹித் முபாறக்
பொதுச்செயலாளர்.
ஐக்கிய காங்கிரஸ் கட்சி.
4.7.2021.
Post a Comment