சிறைகளில் உள்ள முன்னாள் போராளிகளிற்கு நீதி வழங்கவேண்டும் - நாமல்

 குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு நீதி வழங்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான உரிய நடைமுறைகளை உருவாக்கவேண்டும் என அவர் நீதியமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.


எனது வயதை விட அதிக காலம் சிலர் சிறையில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும் அல்லது சந்தேகநபர்களிற்கு புனர்வாழ்வளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் கடுமையான தன்மை காரணமாக பிணை வழங்க முடியாது என்பதால் சட்டமா அதிபர் தலையிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மிகமுக்கிய கொலையொன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்ச மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தவர் கைதுசெய்யப்பட்டார் ஆனால் பிரதான கொலையாளி ஏற்கனவே விடுதலைசெய்யப்பட்டுவிட்டார் என தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்