பெட்ரோலுக்கு விலை கூடுகிறதா?
பொருட்களுக்கு விலை கூடுகிறதா?
இது பற்றி முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.
ஏனென்றால் இந்த நாட்டின் 2 கோடி மக்களில் ஒன்னரைக்கோடி மக்கள் சிங்கள மக்கள்.
பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்களுக்கு விலை கூடினால் அது தாக்கம் முதலில் சிங்கள மக்களுக்குத்தான்.
அதற்கு அடுத்துதான் சிறுபான்மை மக்களைத்தாக்கும்.
ஒன்னரைக்கோடி பெரிதா? 50 லட்சம் பெரிதா?
இந்த அரசாங்கம் 100க்கு 99.5 சிங்கள மக்களால் கொண்டு வரப்பட்ட அரசாங்கம்.
பெட்ரோல், பொருட்கள் விலை அதிகரித்தால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நாம் தலையை ஓட்டுவதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
முடியுமாயின் பெட்ரோல், பொருட்கள் விலை அதிகரிப்பு பற்றி முஸ்லிம்கள் ஓட்டுப்போட்ட முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களை பாராளுமன்றத்தில், ஊடகங்களில் பேச சொல்லுங்கள்.
அவர்களே பேசாமடந்தையாக இருக்கும் போது முஸ்லிம்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?
பொருட்கள் விலை கூடுதல் பெரிய விடயமா? தமக்கென்ற நாட்டை பாதுகாப்பது முக்கியமா என்பது பெரும்பாலான சிங்கள மக்களுக்கு தெரியும்.
சிங்கள மக்களில் உள்ள பெரும்பான்மை மக்கள் எந்த அரசியலை விரும்புகிறார்களோ அந்த அரசியலை அரவணைத்து செல்வதே முஸ்லிம்களுக்கு சிறந்ததாகும்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி
Post a Comment