கொரோனோ வைரஸ் காரணமாக தொழில் ரீதியாக பாதிப்படைந்த பள்ளிவாயல்களில் கடமையாற்றும் மௌலவிமார்களுக்கும் முஅத்தின்மார்களுக்கும் 5000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நாட்டின் உலமாக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஐக்கிய காங்கிரஸ் (உலமா) கட்சியின் தேசிய அமைப்பாளர், முஹம்மத் சதீக் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது,
பள்ளிவாயல்களில் பணிபுரியும் உலமாக்கள், முஅத்தின்கள் கொரோனா கால முடக்கம் காரணமாக அவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என எமது அரசை கோரியிருந்தது.
இதுவிடயத்தை கருத்தில் எடுத்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உலமாக்களுக்கும் ஏனைய சமய தலைவர்களுக்கும் கொரோனா கால விசேட கொடுப்பனவாக ரூபா 5000 வழங்கி வைக்கும் படி பணித்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
இந்த கஷ்டமான காலத்தில் இவ்வாறான உதவி நிச்சயம் சமய தலைவர்களின் உள்ளங்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக நாம் உலமாக்கள் சார்பில் கௌரவ ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எமது உலமாக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Post a Comment