முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் 17 பேர் விடுதலை?

 


பொசன் போயா தினத்தை முன்னிட்டு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் 17 பேர் விடுதலை?


பொசன் போயாவை முன்னிட்டு   முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் 17 பேருக்கு  ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளார் என இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.


பொசன் போயாவை முன்னிட்டு பல வருடங்களாக சிறையிலிருக்கும் 17 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.


விடுதலை செய்யப்படவுள்ளவர்கள் விடுதலைப் புலிகளிற்காக செயற்பட்டவர்கள் சிறையில் மிக நீண்ட காலம் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனைக் காலத்தை விட அவர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடுதலை சம்பந்தமாக

திரு. நாமல் ராஜபக்ஷ அவர்களும் ஜனாதிபதியின்  கவனத்துக்கு

கொண்டுவந்தது குறிப்பிட தக்கது

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்