BREAKING NEWS

அரசியலை அதிரச் செய்வதற்கான சில அதிரடியான செயற்பாடுகள்

 


அரசியலை அதிரச் செய்வதற்கான

சில அதிரடியான செயற்பாடுகள்

அடுத்த வாரத்திற்குள்

.......................................................

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கும் அதன் பங்காளிக் கட்சிகள் சிலவற்றுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகள் நீண்டுகொண்டே செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பங்காளிகள் சில தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் உடும்புப்பிடியாக இருப்பதால் மாற்று வழியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆலோசித்துள்ளனர் என அறியமுடிகின்றது.


அதன் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


சிறிய விடுமுறையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஸ நேற்று முன்தினம் (24) நாடு திரும்பினார். அவர் ஜூலை 6ஆம் திகதியன்று தேசியப் பட்டியல் எம்.பியாக பதவியேற்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பசிலை எம்.பியாக்குவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது.


அதன்பின்னர் ஜூலை மாதத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாகவும் அதில் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ஸ நியமிக்கப்படவுள்ளார் என்றும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உத்தியோகபூர்வமற்ற இந்த அறிவிப்புகள் வெளியானமையால் கொழும்பு அரசியலில் ஓர் அதிர்வு தென்படுகின்றது. அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச உதய கம்மன்பில ஆகிய இருவரும் பசில் ராஜபக்ஸ பங்கேற்றிருந்த முக்கிய சந்திப்புகளை கடந்த காலங்களில் புறக்கணித்திருந்தனர்.


கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு தலைவர் அல்லாத ஒருவர் அழைக்கப்பட்டுள்ளமையை அடுத்தே அவ்வாறான கூட்டங்களை புறக்கணித்ததாக பகிரங்கமாகவே அவ்விருவரும் தெரிவித்திருந்தனர்.


அவ்விருவரும் பகிஷ்கரித்த கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்த அவ்வாறான கூட்டங்களில் தலைமைதாங்கும் குழுவுடன் பசில் ராஜபக்ஸவும் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த பொஸ்பரேட் நிறுவனம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கீழுள்ள கமத்தொழில் அமைச்சின் கீழ் எவ்விதமான முன்னறிவித்தலும் இன்றி கொண்டு செல்லப்பட்டது. அதுதொடர்பிலும் ஏனைய பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.


இது இவ்வாறிருக்க ஜூலை மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும் அமைச்சரவை மாற்றத்தின் போது முழுமையான அமைச்சரவை மாற்றமொன்றும் இடம்பெறலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெறுமாயின் முக்கிய அமைச்சுகளின் பொறுப்புகள் அபகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுவதாகவும் அறியமுடிகின்றது.


அதில் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கீழிருக்கும் அமைச்சுக்கள் அல்லது நிறுவனங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவ்வாறான மாற்றங்கள் எல்லாமே அடுத்தடுத்து முகங்கொடுக்கவேண்டிய தேர்தலைகளை அடிப்படையாக வைத்து காய்களை நகர்த்துவதற்கான ஆரம்பகட்டமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவற்றுடன் கொழும்பு ​அரசியலை அதிரச் செய்வதற்கான இன்னும் சில அதிரடியான செயற்பாடுகள் அடுத்த வாரத்துக்குள் இடம்பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் 17 பேர் விடுதலை?

 


பொசன் போயா தினத்தை முன்னிட்டு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் 17 பேர் விடுதலை?


பொசன் போயாவை முன்னிட்டு   முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் 17 பேருக்கு  ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளார் என இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.


பொசன் போயாவை முன்னிட்டு பல வருடங்களாக சிறையிலிருக்கும் 17 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.


விடுதலை செய்யப்படவுள்ளவர்கள் விடுதலைப் புலிகளிற்காக செயற்பட்டவர்கள் சிறையில் மிக நீண்ட காலம் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனைக் காலத்தை விட அவர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடுதலை சம்பந்தமாக

திரு. நாமல் ராஜபக்ஷ அவர்களும் ஜனாதிபதியின்  கவனத்துக்கு

கொண்டுவந்தது குறிப்பிட தக்கது

சிறைகளில் உள்ள முன்னாள் போராளிகளிற்கு நீதி வழங்கவேண்டும் - நாமல்

 குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு நீதி வழங்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான உரிய நடைமுறைகளை உருவாக்கவேண்டும் என அவர் நீதியமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.


எனது வயதை விட அதிக காலம் சிலர் சிறையில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும் அல்லது சந்தேகநபர்களிற்கு புனர்வாழ்வளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் கடுமையான தன்மை காரணமாக பிணை வழங்க முடியாது என்பதால் சட்டமா அதிபர் தலையிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மிகமுக்கிய கொலையொன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர் குறித்து சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்ச மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தவர் கைதுசெய்யப்பட்டார் ஆனால் பிரதான கொலையாளி ஏற்கனவே விடுதலைசெய்யப்பட்டுவிட்டார் என தெரிவித்துள்ளார்.

20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் நடுநிலை?

 ✍️ நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 8 தமிழ்க் கட்சிகள் ஆதரவு - மூன்று கட்சிகள் எதிர்ப்பு!


✍️20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் நடுநிலை? 


வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்கும் தீர்மானத்தை எட்டு தமிழ்க்கட்சிகள் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்துள்ள மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி மற்றும் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன பிரேரணையை ஆதரிக்க ஏற்கனவே முடிவெடுத்துள்ளன.


இலங்கைத் தமிழரசுக்கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளின் உத்தியோகப்பூர்வ முடிவு இன்னும் வெளியாகவில்லை என்றபோதிலும் ஆதரித்து வாக்களிக்கும் தீர்மானமே நாளை (22) நடைபெறும் அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளன.


அதேபோல கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான மக்கள் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியனவும் ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சிலவேளை வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டால்கூட  எதிர்த்து வாக்களிக்கும் நிலைப்பாட்டில் மேற்படி கட்சிகள் இல்லை.


அதேவேளை, ஆளுங்கூட்டணியிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. மற்றும் பிள்ளையானின் கட்சி வலுசக்தி அமைச்சருக்கு எதிரான பிரேரணையையை எதிர்க்கவுள்ளன.


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பின்போது எத்தகையை முடிவை எடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.


சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன பங்காளிக்கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன. எனினும், 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஹக்கீம், ரிஷாட்டைத்தவிர மேற்படி கட்சிகளின் முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. 


நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் எண்ணிக்கை 15 ஆகும். இதில் தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாட்டை தனித்தனியாக குறிப்பிட்டிருந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியிலுள்ள மூன்று கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியில் அஙகம் வகிக்கின்றன.  அதேபோல இ.தொ.கா. மொட்டு கட்சியில் அங்கம் வகிக்கின்றது.


நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் விவரம் வருமாறு,


1.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன. (145)

2.ஐக்கிய மக்கள் சக்தி. (54)

3.தேசிய மக்கள் சக்தி. (03)

4.இலங்கை தமிழரசுக்கட்சி.(10)

5.ஐக்கிய தேசியக்கட்சி. (01)

6.அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்.(02)

7.எமது மக்கள் சக்தி. (01)

8.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள். (01)

9.ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி. (01)

10.ஈ.பி.டி.பி. (02)

11.முஸ்லிம் தேசிய கூட்டணி. (01)

12.தமிழ் மக்கள் தேசிய கூட்டணி. (01)

13.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். (01)

14.தேசிய காங்கிரஸ். (01)

15.முஸ்லிம் காங்கிரஸ். (01)


ஆர்.சனத்

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.


 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா
தெரிவித்தார் . 

அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோர் உரிமை கோரினார்கள் .
ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் மாத கணக்கில் கட்சிக்குள் முரண்பாடுகள் காணப்பட்டன . பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பாராளுமன்றிற்கு நேரடியாக செல்வதில் சட்ட சிக்கல் காணப்பட்டது . பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு தேசியப்பட்டியல் ஊடாக அத்துரலியே ரத்ன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக கடந்த ஜனவரி மாதம் பதவி பிரமாணம் செய்தார் . ஆறு மாத காலத்திற்கு மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க அனுமதி வழங்கப்பட்டது . என ஆகவே அத்துரலியே ரத்ன தேரர் சுயமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தற்போது குறிப்பிட்டுள்ளார் . எக்காரணிகளுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க
போவதில்லை என‌  பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே அத்துரலியே ரத்ன தேரர் உறுதியாக குறிப்பிட்டுள்ளார் . ஆறு மாத காலத்திற்கு மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க அனுமதி வழங்கப்பட்டது என ஞானசார தேரர் குறிப்பிடுகிறார் . ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக இவ்விருவரும் செய்துகொண்ட ஒப்பந்தம் ஏதும் கட்சிக்கு தெரியாது . ஞானசார தேரர் , அத்துரலியே ரத்ன தேரர் இருவருக்குமிடையினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி விடயத்தில் அபே ஜனபல வேகய கட்சியால் எவ்வித் தீர்வையும் வழங்க முடியாது . இருவரும் பேசி இப்பிரச்சினைக்கு இணக்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார் .

கட்சி முரண்பாடுகளை ஊடகங்களில் பேசுவது பிரயோசனமற்றது

 


கட்சி முரண்பாடுகளை ஊடகங்களில் பேசுவது பிரயோசனமற்றது , ஐக்கிய தேசிய கட்சிக்கு என்ன ஆனது என்பதை நாம் உண‌ர‌ வேண்டும் - நாமல் ராஜபக்ஷ


கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறித்து ஊடகங்களின் முன்னிலையில் பேசுவது பிரயோசனமற்றது . இவ்விவகாரம் தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார் . நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார் . அவர் மேலும் கூறுகையில் , , கட்சியின் உள்ளக விவகாரங்களை பொது வெளியில் பேச ஆரம்பித்தமையால் ஐக்கிய தேசிய கட்சிக்கு என்ன ஆனது என்பதை நாம் அனைவரும் அறிவோம் . அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு கட்சி முரண்பாடுகள் தொடர்பில் கட்சிக்குள்ளேயே பேசி தீர்வு காணப்பட வேண்டும் .


பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரின் தீர்மானம் அவருடையதாகும் . அது தொடர்பில் எமக்கு ஏதேனும் நிலைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை நாம் கட்சிக்குள் பேசி தீர்வு நடவடிக்கை எடுப்போம் . காண கட்சியின் பதவி வகிப்பவர்கள் தமது கருத்துக்களை வெளியிட முடியும் . அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது . அவ்வாறான கருத்துக்கள் தொடர்பில் விமர்சனங்கள் காணப்பட்டால் அதனை தெரிவிக்க வேண்டிய களம் ஊடகங்கள் அல்ல என்றார் .


வ‌ங்கியின் சேமிப்பில் வ‌ரும் மேல‌திக‌ ப‌ண‌ம் ஹ‌ராமான‌ வ‌ட்டி அல்ல‌.

 ஒருவ‌ர் த‌ன‌து ப‌ண‌த்தை வ‌ட்டி த‌ர‌ வேண்டும் என்ற‌ அடிப்ப‌டையில் ஒருவ‌ரிட‌மோ, வ‌ங்கியிலோ க‌ட‌னாக‌ கொடுக்கும் போதுதான் அங்கு ஹ‌ராமான‌ வ‌ட்டி என்ப‌து உருவாகும்.


க‌ட‌ன் என்றில்லாது த‌ன‌து ப‌ண‌த்தை சேமிப்ப‌த‌ற்காக‌ அல்ல‌து பாதுகாப்புக்காக‌ வ‌ங்கியின் சேமிப்பில் போட்டு அத‌ன் வ‌ருமான‌ம் ஹ‌ராமான‌ வ‌ட்டி ஆகாது.

குர்ஆனில் ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ல்ல‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. ஒருவ‌ர் த‌ன் ஆடுக‌ள் சில‌தை ஒருவ‌ரிட‌ம் ஒப்ப‌டைத்து விட்டு செல்கிறார். ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து என‌து ஆடுக‌ளை தா என‌ அவ‌ர் கேட்ட‌ போது ஒரு ப‌ட்டியை காட்டி இவை அனைத்தும் உன‌து  ஆடுக‌ளால் அதிக‌ரித்த‌வைதான் என‌ சொல்கிறார். அந்த‌ ம‌னித‌ரும் என‌து ஆடுக‌ள் ம‌ட்டும் போதும் என‌ சொல்லாது அனைத்து குட்டி வ‌ட்டிக‌ளையும் எடுத்துச்செல்கிறார். இத‌னை இறைவ‌ன் க‌ண்டிக்காம‌ல் ந‌ல்ல‌ செய‌ல் என்கிறான்.

ஆடுக‌ளை பாதுகாப்புக்காக‌ விட்டு அத‌ன் விளைவால் ஏற்ப‌ட்ட‌ குட்டிக‌ள் வ‌ட்டி அல்ல‌.

அது போல் வ‌ங்கிக்கு நாம் க‌ட‌ன் என்ற‌ பெய‌ரில் கொடுக்காம‌ல் சேமிப்பில் போட்டால் வ‌ரும் மேல‌திக‌ ப‌ண‌ம் ஹ‌ராமான‌ வ‌ட்டி அல்ல‌.


வ‌ட்டியில் ஹ‌ராமான‌ வ‌ட்டி ஹ‌லாலான‌ வ‌ட்டி உள்ள‌தா என‌ சில‌ர் கேட்க‌லாம். கொலை செய்வ‌தில் ஹ‌ராமான‌ கொலையும் உண்டு ஹ‌லாலான‌ கொலையும் உண்டு. கொலைக்கு கொலை ஹ‌லாலாகும். சும்மா ஒருவ‌னை கொல்வ‌து ஹ‌ராமாகும்.

அர்ரிபா அல்முஹ‌ர்ர‌ம், ஹ‌ராமான‌ வ‌ட்டி என்ற‌ வ‌ச‌ன‌ம் பிக்ஹ் நூல்க‌ளில் உள்ள‌து.

- முபாற‌க் மௌல‌வி.


استثناءات من الربا المحرم


غير أن الفقهاء نصوا على أن تحريم الربا هو من باب العموم، لكن هناك خصوص له، فهناك من أنواع الربا ما يكون حلالا، فالأصل أن الربا محرم، لكن يستثنى من ذلك بعض الحالات التي يكون فيها الربا حلال، ومن ذلك:

أولا- بيع العرايا

بيع العرايا، وهو بيع الرطب في رؤوس النخل خرصا بمثله من التمر، بكيل معلوم، والأصل النهي عن بيع التمر بالتمر، لكن يستثنى من ذلك هذا النوع.

وهذا مذهب جمهور الفقهاء، واستدلوا بما أخرجه البخاري ومسلم من حديث سهل بن أبي حثمة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن بيع التمر بالتمر، ورخص في العرية، أن تباع بخرصها، يأكلها أهلها رطبا.

كما استدلوا بما أخرج مسلم عن أبي هريرة – رضي الله عنه- أن  النبي صلى الله عليه وسلم رخص في بيع العرايا، في خمسة أوسق، أو دون خمسة أوسق.

وخالفهم في ذلك الحنفية، مستدلين بعموم الأدلة التي تحرم الربا، وللنهي الوارد عن المزابنة، وهي: بيع التمر على رأس النخل بتمر مجدود مثل كيله خرصا.

ثانيا – الزيادة غير المشروطة في القرض

ومن الحالات التي تقع تحت مسمى الربا لكنها مباحة، ما لو اقترض شخص من شخص مبلغا على أن يرده بعد مدة، فلما جاء الأجل رد المقترض القرض وزيادة دون اشتراط بينهما عند أخذ القرض.

وهذا هو مذهب جمهور الفقهاء من الحنفية، والشافعية، والمالكية، والحنابلة. وهو مروي عن عبد الله بن عمر، وسعيد بن المسيب، والحسن البصري، وعامر الشعبي، والزهري، ومكحول، وقتادة، وإسحاق بن راهويه، وهو إحدى الروايتين عن إبراهيم النخعي.

واستدل جمهور الفقهاء بما أخرجه مسلم في صحيحه عن جابر بن عبد الله قال: {أقبلنا من مكة إلى المدينة مع رسول الله صلى الله عليه وسلم فاعتل جملي. وساق الحديث بقصته، وفيه ثم قال: بعني جملك هذا، قال: فقلت: لا، بل هو لك، قال: بل بعنيه، قال: قلت: لا، بل هو لك يا رسول الله، قال: لا، بل بعنيه، قال: قلت: فإن لرجل علي أوقية ذهب فهو لك بها، قال: قد أخذته، فتبلغ عليه إلى المدينة، ثم قال رسول الله صلى الله عليه وسلم لبلال: أعطه أوقية من ذهب وزيادة، قال: فأعطاني أوقية من ذهب وزادني قيراطا . وهذه زيادة في القدر.

كما استدلوا بما ورد عن أبي رافع مولى رسول الله صلى الله عليه وسلم أن رسول الله استسلف من رجل بكرا، فقدمت عليه إبل من إبل الصدقة، فأمر أبا رافع أن يقضي الرجل بكره  ، فرجع أبو رافع فقال: لم أجد فيها إلا خيارا بعيرا رباعيا، فقال: أعطه إياه، إن خير الناس أحسنهم قضاء.

النوع الثالث: البيع بالتقسيط

ومما قد يدخل في معنى الربا هو اختلاف بيع التقسيط ( بيع الآجل) عن البيع العاجل، بحيث تكون ثمن السلعة في البيع الآجل ( التقسيط) مختلفا عن بيع السلعة في (العاجل)، فيزيد في الثمن مقابل الزمن، وهو ذات معنى الربا.

إلا أن جمهور الفقهاء يرون  جواز بيع التقسيط وهو بيع الشيء بأكثر من سعر يومه لأجل تأجيل زمن الدفع ، وذلك لعموم الأدلة التي تبيح البيع ، ومن ذلك قول الله تعالى : { وأحل الله البيع }  وهو عام في إباحة كل بيع إلا ما خص الدليل بالتحريم ، ولا يوجد دليل يخصص هذا العموم،

وذهب بعض آل البيت كزيد العابدين وبعض فقهاء الزيدية إلى أنه حرام، لحديث أحمد والنسائي والترمذي عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم:” من باع بيعتين في بيعة فله أوكسهما أو الربا”.

وحمل الجمهور هذا الحديث الذي يفهم منه التحريم على أنه إذا عرض البائع السلعة على المشتري فيقول له: بعتك هذه السلعة نقدا بكذا، وإلى سنة بكذا، ويترك له الخيار وينصرف دون تحديد واحد منهما، أما إذا حدد المشتري قبول البيع بواحدة منهما فجائز.

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

 


பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா? 

பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா?

இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை.

ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள்.

பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். 

அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும்.

ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா?

இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம்.

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை.


முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். 

அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்?


பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு தெரியும்.


சிங்க‌ள‌ ம‌க்க‌ளில் உள்ள‌ பெரும்பான்மை ம‌க்க‌ள் எந்த‌ அர‌சிய‌லை விரும்புகிறார்க‌ளோ அந்த‌ அர‌சிய‌லை அர‌வ‌ணைத்து செல்வ‌தே முஸ்லிம்க‌ளுக்கு சிற‌ந்த‌தாகும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

உல‌மா க‌ட்சி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா கம்மன்பில?

 கொரோனா வைரஸின்  கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உணவைக்கூட முறையாக உண்ண வழியின்றி பலர் விழிபிதுங்கி நிற்கின்றனர். 


இந்நிலையில் திடீரென நேற்றிரவு எரி பொருட்களின் விலை அதிகரித்தது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான கையோடு அடுத்துவரும் நாட்களில் ஏனைய சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயரக்கூடும் என்பதை மக்கள் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டனர். 


இதனால் எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அதனை மீளப்பெறுமாறும் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளும் இந்த வலியுறுத்தலை விடுத்துவருகின்றன.


இவ்விவகாரத்தால் அரசுக்கும் பெரும் நெருக்கடி - தலையிடி ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அதிருப்தி அலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் அரசின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று மாலை அதிரடியாக அறிக்கையொன்றை வெளியிட்டது.


எரிபொருட்களின் விலை தற்போதைய சூழ்நிலையில் அதிகரிக்கப்பட்டமை தவறு எனவும், இவ்வாறானதொரு முடிவை எடுத்த துறைசார் அமைச்சர் முழு பொறுப்பையும் ஏற்று பதவி துறக்க வேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


அமைச்சுகளை மாற்றுவதற்கும், விடயதானங்களை கைமாற்றுவதற்குமான முழு அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.தற்கான பரிந்துரையை பிரதமரால்கூட முன்வைக்க முடியும்.  


துறைசார் அமைச்சர் என்ற வகையில் கம்மன்பில தன்னிச்சையாக செயற்பட்டிருந்தால், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த சூழ்ச்சி செய்திருந்தால் மேற்படி நடைமுறையை அரச தலைமைகள் கையாளலாம். 


நிலைமை இவ்வாறிருக்க,  திடீரென அதுவும் அரசின் தலைமைக்கட்சியிடமிருந்தே அறிக்கை வெளிவருவது பிரச்சினைகளை திசைதிருப்பவா என்ற கேள்விக்கு வழிவிட்டுள்ளது. 


பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர்களை வெளியேற்றுவதற்கு சக போட்டியாளர்கள் சில யுக்திகளை கையாள்வதுபோல, அரச கூட்டணியிலிருந்து கம்மன்பிலவை கழற்றிவிடுவதற்கு பஸிலின் சகாக்கள், இவ்வாறான நகர்வு மூலம் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 


தென்னிந்தியாவில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ‘பிக்பாஸ்’ இருந்தது - இருந்துவருகின்றது. 


‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நடிகர்கள், வில்லன்கள், காமெடியன்கள், சுயநலவாதிகள், பொதுநலவாதிகள் என பல்வேறு குண அம்வங்களைக்கொண்டவர்கள் போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதுபோலவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வலதுசாரிகள், இடதுசாரிகள், இனவாதிகள், மதவாதிகள், முற்போக்கு வாதிகள், தேசப்பற்றாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.


‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ‘பிக்பாஸ்’ யார் என்பது எவருக்கும் தெரியாது. அது சிதம்பர ரகசியமாக பேணி பாதுகாக்கப்பட்டுவருகின்றது. ஆனால் இலங்கை அரசாங்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான் ‘பிக்பாஸ்’.  20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறிய பின்பு சர்வபலமும் அவருக்கு வந்துவிட்டது. எனவே, எவரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலையும் காணப்படுகின்றது.


அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கம்மன்பில, விமல்வீரவன்ஸ ஆகிய இருவருக்கும், மொட்டு கட்சியிலுள்ள பஸில் அணி உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை நீடித்துவருகின்றது. இவ்விருவரும் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவருகின்றமையே முரண்பாட்டுக்கு பிரதான காரணமாகும். 


இந்த பகையால் வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இவிவிருவரையும் பஸிலின் சகாக்கள் வெளுத்து வாங்குவது வழமை. மொட்டு கட்சியின் தலைமைத்துவம் குறித்து விமல் வீரவன்ஸ வெளியிட்ட கருத்தால் அவரை மன்னிப்பு கேட்டுமாறுகூட கடும் அழுத்தங்களை மொட்டுக்கட்சி பிரயோகித்தது.  பதிலுக்கு விமல் '12' அணியை உருவாக்கினார். 


தற்போது எரிபொருள் விவகாரத்தை பயன்படுத்தி கம்மன்பிலவின் தலை குறிவைக்கப்பட்டுள்ளது.


பிக்பாஸ் வீட்டிலிருந்து அதாவது அமைச்சரவையில் இருந்து கம்மன்பிலவை வெளியேற்ற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, தாமாக முன்வந்து கம்மன்பில பதவி துறப்பாரா, அல்லது வெளியேற்றப்படுவாரா என பலரும் கேட்கின்றனர். 


அதேவேளை, கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்தால்கூட ,அதற்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில் அது கம்மன்பிலவுக்கு ஆப்பாக அமைந்துவிடும். 


ஆக தருணம்பார்த்து கம்மன்பிலமீது பஸிலின் சகாக்கள் அரசியல் கணைகளைத்தொடுத்துள்ளனர். எனினும், நெருக்கடியான சூழ்நிலைகளில் ஜனாதிபதிக்கு கம்மன்பில விசுவாசமாக செயற்பட்டுள்ளதால் கம்மன்பிலவுக்கு எவ்வித நெருக்கடியும் வராது என  உள்வீட்டுத் தகவல்கள் சொல்கின்றன. 


கம்மன்பில தாமாக பதவி துறந்தால் மட்டுமே வெளியேற வாய்ப்பு உள்ளது. இல்லையேல் அவர் காப்பாற்றப்படுவார். பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பார்.


கம்மன்பிலமீது கைவைத்தால் விமல் குழம்புவார். விமல் குழப்பினால் தேசிய வாத அமைப்புகள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அது அரசுக்கு மேலுமொரு அடியாக அமையும். எனவே, கம்மன்பிலவின் பதவிக்கு ஆபத்து வராது என்பது உறுதி. 


எனவே, எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை திசை திருப்பவா அல்லது தாமாகவே விலை அதிகரிப்பை செய்துவிட்டு , அதனை மீளப்பெற்று மக்கள் நலன் கொண்ட அரசு என காண்பிப்பதற்கான நாடகம் திடீர் அறிக்கைமூலம் அரங்கேற்றப்படுகின்றதா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.  அடுத்துவரும் நாட்களில் நடைபெறும் அரசியல் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே உண்மை என்னவென்பதை அறியக்கூடியதாக இருக்கும்.


ஆர்.சனத்

அதிகாரச் சமாநிலையே நிரந்தரத் தீர்வு

 அதிகாரச் சமாநிலையே நிரந்தரத் தீர்வு.

*********************************************


பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நாங்கள் ஒன்றையே சொல்லி வந்திருக்கின்றோம். 


அதாவது தற்போது தென்கிழக்கு என்று சொல்லப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் என்பதை அடித்தளமாகக் கொண்டு மட்டக்களப்பு, மன்னார், திருமலை, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய வடகிழக்கின் சகல மாவட்டங்களிலும் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இருக்கின்றார்களோ முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றை நிலத் தொடர்பற்ற வகையில் இணைக்கும் ஒரு அமைப்புதான் வேண்டும் என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்று எமது தலைவர் எம். எச். எம். அஷ்ரப் கூறியுள்ளார்.


தென்கிழக்கு மாகாண சபையை நாம் வலியுறுத்தவில்லை. தென்கிழக்கு மாகாண சபை தான் நாம் கேட்ட அகன்ற முஸ்லிம் மாகாண சபைக்குப் பதிலாக முன் வைக்கப்பட்டிருக்கின்ற தறிக்கப்பட்ட ஒரு அலகு. 


இந்த நாட்டில் இன்னுமொரு இனப்பிரச்சினை வரக்கூடாது என்று நாம் பார்கிறோம். நாளைக்கு மாறி நின்று ஒருவர் கேட்கக் கூடும். 


தமிழர்கள் இவ்வளவு காலமும் போராட்டத்தைச் செய்து விட்டார்கள். 


ஆகவே நிபந்தனையற்ற வகையில் இணைக்கப்படும் வடகிழக்கினுள் இருந்து பாருங்கள் என்று யாரும் சொல்லலாம். 


அப்படிச் செய்ய முடியாது. ஏனென்றால் நாம் இருந்துபார்த்திருக்கின்றோம்.


வரதராஜாப் பெருமாளுடைய ஆட்சிக்காலத்தில் நாம் இருந்திருக்கின்றோம். 


அவருடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்கள் இருக்கிறது. 


அதைப்போல பிரபாகரன் செய்த அநியாயங்களும் இருக்கிறது. ஆகவே முஸ்லிம்களுடைய அச்சம் பிழையானது என்று யாரும் சொல்ல முடியாது. 


நாம் கேட்பதெல்லாம் தமிழர்களுடன் சமாதானமாக வாழ்வதற்கு ஒரு அதிகாரச்சமாநிலை. 


இந்த சமநிலையை உறுதிப்படுத்தத்தான் நாங்கள் கேட்கிறோமே ஒழிய அதற்கப்பால் நாம் வேறெதுவும் கேட்கவில்லை. 


தமிழர்களுடைய பிரச்சனை தீர்க்கப்படும் போது முஸ்லிம் மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்படல்  வேண்டும்.


இதே நிலைப்பாட்டிலேயே தான் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அரசியல் யாப்பும் யோசனைகளை அரசுக்கு முன்வைத்துள்ளது.


எம். ரீ. ஹசன் அலி

செயலாளர் நாயகம்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

Determined enforcement and reliable information

 

Determined enforcement and reliable information - Sri Lanka’s need of the hour in Intellectual Property Protection call

·        World Anti-Counterfeiting Day - June 8, 2021

By Sudath Perera, Managing Partner, Sudath Perera Associates

 

Pursuant to the World Anti-Counterfeiting Day, which fell on 8th June 2021, we are reminded of the severe impact and threat of counterfeit and pirated products on our lives and the economy.

The World Anti-Counterfeiting Day was established by the Global Anti-Counterfeiting Group (GACG) to address the risks and damage caused by the counterfeit and piracy trade. GACG’s day focusing on Anti-Counterfeiting is increasingly gaining in importance across the event calendars of global trade and Intellectual Property Rights (IPR) due to the level of unprecedented losses that are now mounting. As recently as in 2019 the Organisation for Economic Co-operation and Development (OECD) estimates that trade in global ‘fake goods’ was a hefty 3.3% of overall world trade. Consequences of the counterfeit and piracy trade are extensive- lost taxes, royalties and other revenues, loss of jobs, loss of goodwill and reputation, and even loss of incentive to innovate and invest.

Counterfeiting is often seen as a mere replication of products from top brands but practically, it needs to be evidenced in a wider perspective to gauge its real impact. Counterfeiting in fact is not just limited to high-end products but impacts all industries-from consumer goods, pharmaceuticals, medical equipment, electronics, children’s toys, garments and accessories to pesticides and motor vehicle parts. With the growth of social media and e-commerce platforms, there is a need for greater vigilance to safeguard consumers from purchasing illicit products, especially products which are made to ensure health and safety. The Global Brand Counterfeiting Report, 2018 estimates that the losses suffered due to online counterfeiting worldwide has amounted to US $ 323 Billion (2017). With the ongoing covid-19 pandemic, we have witnessed a surge of counterfeit and substandard products at an alarming rate, especially through online platforms, with violators taking advantage of the urgent needs of the public. Pharmaceuticals, branded foods and many other branded items are at high risk of becoming immediate victims to counterfeiting during this Pandemic.

Violators of IPR have become increasingly advanced and operate unregulated through untaxed smuggled imports and sales. These illegal profits are then in turn reinvested to further other illegal activities. Therefore, from holding platforms accountable, to acting against violators, and to being conscious consumers, we, as corporate leaders, brand owners and consumers, all have a duty to ensure that IPR are protected.

In Sri Lanka, the Intellectual Property Act No. 36 of 2003 (IP Act), a comprehensive act in line with the TRIPS Agreement, protects brand owners’ rights including copyrights, trademarks, patents and industrial designs. The IP Act, describable as Sri Lanka’s principal bulwark against counterfeiting, provides for Civil and/or Criminal litigation including for trademark or copyright infringement, unfair competition, misleading trade practices, etc. Further, the Customs Ordinance No. 17 of 1809 amendment strengthens the enforcement mechanism as Customs has ex-officio powers to seize and detain counterfeit / pirated goods contravening the IP Act. Accordingly, Sri Lanka has a robust IPR framework which recognizes the importance of effective enforcement of IPR for the protection of consumers and brand owners.

Still, for the IPR framework to be successful it is essential that the Law is applied –and enforced –across the board against all violators committing offences by the regulatory bodies vested with powers to enforce IP Laws in Sri Lanka. It is here that trade, industry and consumers need to collectively stand as ‘one voice’ to combat the risk and damage caused by the onslaught of dangerous fake goods. Further, all stakeholders need to call for data and statistics on losses incurred due to counterfeiting, directly from the marketplace, industries and brands. Such a call can be a strong foundation for the nationwide Anti-Counterfeiting demand that is now the need of the hour in safeguarding our IPR. 

I strongly believe that inculcating IPR protection at secondary education levels will help in educating young minds on the importance of IPR protection, as they are the future generation of inventors, creators and leaders of our nation. Recalling the theme of IP and SMEs from the World IP Day of 26th April 2021, it is time to ensure that all innovations and inventions of the growing small business community, and of young inventors, are protected. Moreover, as the country focuses on increasing international trade and investment, IPR protection, along with investment protection, is of the utmost importance to ensure the development of the local economy. The current commercial environment is such that potential investors will perform a thorough review of not only the IPR laws of a country but also the enforcement of such laws before committing to a country. Therefore, as the global community unites to raise awareness of the negative impacts of counterfeiting and piracy during this World Anti-Counterfeiting week, it is time that we collectively get together as a nation of ethical global citizens to fight against violators to protect IPR in Sri Lanka.


உர‌ங்க‌ளுக்கான‌ த‌டை நாட்டில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும்


அரசாங்கத்தின் இரசாயன உரங்களுக்கான தடை எந்தவொரு திட்டமிடப்பட்ட நடைமுறைகளும் இல்லாமல் இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கத்தின் நோக்கம் மக்களை உயிருடன் வைத்திருப்பது அல்லாமல் , மக்களைக் கொல்வது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது என‌ எதிர்க்க‌ட்சித்த‌லைவ‌ர் ச‌ஜித் பிரேம‌தாச‌ தெரிவித்துள்கார்.


அவ‌ர‌து அறிக்கையில் தெரிவித்திருப்ப‌தாவ‌து,


 அரசாங்கத்தின் இந்த அவசர மற்றும் தன்னிச்சையான முடிவு தவிர்க்க முடியாமல் நாட்டில் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் மாத்திரமல்லாது பயங்கர பஞ்சம் உருவாகவும் வழிவகுக்கும் . காபனிக் உரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை .


 ஆனால் திடீரென , பொறுப்பற்ற முறையில் எடுக்கப்பட்ட இரசாயன உரங்களுக்கான இந்த தடை விரைவில் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையிலும் பேரழிவு தரும் அடியாக அரசாங்கத்தால் உணரப்படும் . இரசாயன உரங்களை தடை செய்வதாகவும் , காபனிக் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அரசாங்கம் கூறுகிறது காபனிக் உரங்களை வழங்குவதில் பற்றாக்குறையும் உள்ளது . 


இது அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவாகும் இலங்கையில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் விதைகளுக்கான இரசாயன உரங்களுடன் பழக்கமாகிவிட்டன. நடைமுறையில்லாமல் அறியாமலேயே எடுக்கப்பட்ட முடிவுகளால் இன்று நாட்டின் பேரழிவுக்கே வழிவகுத்துள்ளது . இரசாயன உரங்களை தடை செய்வதாகவும் , காபனிக் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அரசாங்கம் கூறுகிறது . இது ஒரு கடுமையான விபத்துக்குச் சமனானது , இதன் மூலம் உலகின் முன்னணி " குப்பைக் குவியலாக நம் நாட்டை மாற்ற அரசாங்கத்திடம் சதி உள்ளதா என்ற கடுமையான கேள்வி உள்ளது . 


குப்பைகளான இந்த கழிவு உரத்தை இறக்குமதி செய்வதால் , பல்வேறு பூஞ்சை மற்றும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் நாட்டில் பரவ வாய்ப்புள்ளது . இத்தகைய இறக்குமதிகள் விலங்குகள் மற்றும் தாவரச் சட்டத்திற்கும் எதிரானவை அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு காபனிக் உரங்கள் போதுமான அளவு வழங்கப்படவில்லை . நடைமுறைத்தன்மையை விலக்கும் அறிவியலற்ற முடிவுகள் பேரழிவுக்கே மீளவும் வழிவகுக்கும் . இப்போது கூட உரத் தடை காரணமாக மோசமான விளைவுகள் ஏற்பபட்டுள்ளன . இதன் காரணமாக நெல் விவசாயிகள் மிகவும் உதவியற்றவர்களாக மாறியுள்ளனர் . விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரத்தைக் ' கோரி விவசாய திணைக்களங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள். இதற்கு மேலதிகமாக , உருளைக்கிழங்கு விவசாயிகள் மற்றும் பிற தோட்டச் செய்கைகள் விவசாயிகள் போன்றோர்களும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுக்கு பலியாகியுள்ளனர் .


 சந்தையில் கறுப்பு சந்தை விலையில் விற்கப்படும் இரசாயன உரங்களுக்கான போட்டி காரணமாக கொரோனாவின் புதிய கொத்தனிகள் வெளிவர வாய்ப்புள்ளது , இவற்றை விட முதலில் மக்கள் உயிர் வாழ வேண்டும் . அதற்கு உணவு மிக முக்கியமான காரணியாகும் . கொரோனா பேரழிவால் உலகம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது . நோய் பயம் மற்றும் மரண பயம் ஆகியவற்றுடன் , இலங்கை அரசாங்கத்தினால் பஞ்சத்துக்கான பயம் என்று மக்களின் மூன்று அச்சங்களுக்கும் அரசாங்கமே அழைப்பு விடுத்துள்ளது .


 " ஒவ்வொரு புரட்சியின் மூலமும் பசியும் அதிலிருந்து விடுபடும் சுதந்திரமும் தான் என்று அரிஸ்டோட்டில் கூறினார் . அரசாங்கம் அதன் குறுகிய நோக்கங்களை ஒதுக்கி வைத்து மக்களை உயிருடன் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , இதுபோன்ற பகுத்தறிவற்ற மற்றும் முட்டாள்தனமான முடிவுகளை மாற்றியமைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.உல‌மாக்க‌ளுக்கும் ஏனைய‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ர்க‌ளுக்கும் கொரோனா கால‌ விசேட‌ கொடுப்ப‌ன‌வாக‌ ரூபா 5000 வ‌ழ‌ங்கி வைக்கும் ப‌டி ப‌ணித்துள்ள‌மை மிக‌வும் பாராட்ட‌த்த‌க்க‌ விட‌ய‌மாகும்.

  


கொரோனோ வைரஸ் காரணமாக தொழில் ரீதியாக பாதிப்படைந்த ப‌ள்ளிவாய‌ல்க‌ளில் க‌ட‌மையாற்றும் மௌலவிமார்களுக்கும் முஅத்தின்மார்களுக்கும் 5000 ரூபா விசேட‌ கொடுப்பனவு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நாட்டின் உல‌மாக்க‌ள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வ‌தாக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் (உல‌மா) க‌ட்சியின்   தேசிய அமைப்பாளர், முஹம்மத் சதீக் தெரிவித்துள்ளார். 

அவ‌ர் தெரிவித்திருப்ப‌தாவ‌து,


ப‌ள்ளிவாய‌ல்க‌ளில் ப‌ணிபுரியும் உல‌மாக்க‌ள், முஅத்தின்க‌ள் கொரோனா கால‌ முட‌க்க‌ம் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ளுக்கு அர‌சாங்க‌ம் உத‌வி செய்ய‌ வேண்டும் என‌ எம‌து அர‌சை கோரியிருந்த‌து. 


இதுவிட‌ய‌த்தை க‌ருத்தில் எடுத்த‌ கௌர‌வ‌ பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அவ‌ர்க‌ள் உல‌மாக்க‌ளுக்கும் ஏனைய‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ர்க‌ளுக்கும் கொரோனா கால‌ விசேட‌ கொடுப்ப‌ன‌வாக‌ ரூபா 5000 வ‌ழ‌ங்கி வைக்கும் ப‌டி ப‌ணித்துள்ள‌மை மிக‌வும் பாராட்ட‌த்த‌க்க‌ விட‌ய‌மாகும். 


இந்த‌ க‌ஷ்ட‌மான‌ கால‌த்தில் இவ்வாறான‌ உத‌வி நிச்ச‌ய‌ம் ச‌ம‌ய‌ த‌லைவ‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை ம‌கிழ்ச்சிப்ப‌டுத்தியிருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.  இத‌ற்காக‌ நாம் உல‌மாக்க‌ள் சார்பில் கௌர‌வ‌ ஜ‌னாதிப‌திக்கும் பிர‌த‌ம‌ருக்கும் எம‌து உல‌மாக்க‌ள் சார்பில் ந‌ன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar