முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

 


சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் 


மாளிகைக்காடு நிருபர் 


றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். 


இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த  இலங்கை அரசியலின் மூத்த அரசியல்வாதிகளான சேகு இஸ்ஸதின், ஏ.எல்.எம். அதாஉல்லா போன்ற அரசியல் தலைவர்களை கொண்ட அக்கரைப்பற்று மண்ணில் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தில் நெறி தவறிய அரசியல் சித்தாந்தங்களை பேசிக்கொண்டு வாய்க்கு வந்த கருத்துக்களை பேசிக்கொண்டும் கைக்கு வந்த எழுத்துக்களை எழுதிக் கொண்டும்  நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் அவர் முஸ்லிம் சமூகத்தில் புதிதாக முளைத்திருக்கும் பீடையாகவே நோக்கவேண்டியுள்ளது. 


அண்மையில் சாணக்கியன் வடகிழக்கை இணைக்க வேண்டும், கல்முனையை துண்டாட வேண்டும் என்று பேசிய போது அதற்கு எதிராக முஸ்லிம் சமூகம் பலத்தை எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருந்த போது இவர் சாணக்கியனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு சாணக்கியனின் வடகிழக்கு இணைப்பு, கல்முனை துண்டாடல் போன்ற கூற்றுக்களை வரவேற்கும் விதமாக கருத்துக்களை வெளியிட்டு சமூகத்தை காட்டிக்கொடுத்தார். இவரின் காட்டிக்கொடுப்பு புத்தியை நன்றாக அறிந்த அக்கரைப்பற்று மக்கள் கடந்த மாநகர சபை தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் நல்ல பாடத்தை புகட்டி சில நூறு வாக்குகளை மட்டுமே அளித்திருந்தனர். சொந்த ஊர் மக்களினால் நிராகரிக்கப்பட்டு கடந்த காலங்களில் கடுமையாக மண்கவ்வியவர் தான்  இவர். 


முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல இவருடைய எண்ணங்கள் உள்ளது. தன்னுடைய ஊரில் சொந்த வட்டாரத்தையே வெல்ல முடியாத இவர் மாநகரை வென்று, தொகுதியை வென்று பல்லாயிரம் மக்களின் மனதை வென்ற முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்களை விமர்சிக்கிறார். சவாலாக முன்வைக்கிறேன் உங்களால் முடிந்தால் உங்களது மாநகர சபை வட்டாரத்தில் நின்றாவது வென்று காட்டுங்கள். அப்புறம் இவர்களை பற்றி சாடலாம் என்பதை தெரிவித்து கொள்வதுடன் நீங்கள் எட்டப்பர் என்பதையும், சமூகத்தின் மீது ஒருதுளியளவும் பற்றில்லாதவர் என்பதையும் மக்கள் நன்றாக அறிவார்கள் என்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்