கிழக்கு மாகாணத்தில் தமிழ் அமைச்சர்கள் இருந்தது மிக குறைவு. முஸ்லிம் எம்பீக்களே அதிகம் அமைச்சர்களாக இருந்ததுண்டு.
1989ம் ஆண்டு அமைச்சராக இருந்த தேவநாயகம் கல்முனையில் கரவாகு வடக்கு பிரதேச செயலகம் ஒன்றை உருவாக்கும்படி அம்பாரை அரச அதிபருக்கு கட்டளையிட்டிருந்தார்.
அது அமைச்சரின் கட்டளைதானே தவிர அதற்குரிய வர்த்தமாணி வந்ததாக தெரியவில்லை.
ஆனாலும் தேவநாயகம் தன் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சி செய்ததை பாராட்டத்தான் வேண்டும்.
89ல் கல்முனையின் அமைச்சராக ஏ ஆர் எம் மன்சூர் இருந்தும் இதனை தடுக்கவில்லை.
அதன் பின் 1989 தொடக்கம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் எம் பியாக கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவராவது கரைவாகு வடக்கின் எல்லை எது என்பதை தனது நேசத்துக்குரியவராக இருந்த ஜனாதிபதி பிரேமதாச மூலம் வர்த்தமாணி வெளியிட்டிருக்கலாம். செய்யவில்லை.
94 முதல் அஷ்ரப் பெரும் பலம் வாய்ந்த அமைச்சராக இருந்த போதும் இது விடயத்தில் எதுவும் செய்யவில்லை.
அதன் பின் ரவூப் ஹக்கீம் கெபினட் அமைச்சராக பல காலம் இருந்தார். அவர் கல்முனையை கணக்கில் எடுக்கவும் இல்லை. அதன் பின் ஹரீஸ் எம் பி பிரதி அமைச்சர், ராஜாங்க அமைச்சராக இருந்தார்.
அவரும் இதோ முயற்சிக்கிறேன் என காலம் கடத்தினாரே தவிர உப செயலகத்தின் ஒரு மயிரைக்கூட பிடுங்கவில்லை. ஹரீசுக்கு ஆதரவாக செயல்படுவார் என எதிர்பார்த்த ரவூப் ஹக்கீம் தமிழ் கூட்டமைப்பினருக்கு சார்பாகவே நடந்துகொண்டார்.
கடந்த ஆட்சியில் பல முஸ்லிம் அமைச்சர்கள், பி. அமைச்சர்கள் இருந்தும் கல்முனை செயலகத்தை தாளவெட்டுவானால் சின்ன விடயத்தைக் கூட செய்யவில்லை. இதற்காக உலமா கட்சியினராகிய நாம் பாரிய அழுத்தங்களை இவர்களுக்கு கொடுத்தோம். எதுவும் செய்யாமல் கல்முனை மக்களை ஏமாற்றி விட்டனர்.
கல்முனையின் சில முஸ்லிம் சிவில் இயக்கங்களும் ஹக்கீமுடன் சேர்ந்து சாதிக்கலாம் என கூறி அவரோடு தொடராக பேசினர். கடைசியின் ஹக்கீமை நம்பி பலன் இல்லை என கூறி அவர்களும் ஒதுங்கினர்.
முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக கல்முனை மக்கள் குரல் எழுப்புவதன் மூலம் மட்டுமே கல்முனையை காப்பாற்ற முடியும் என நாம் எவ்வளவோ கூறினோம். கடைசியில் இன்று வரை கல்முனை செயலக பிரச்சினை தீரவில்லை.
இப்போதும் கூட இதுவிடயத்தில் ஹரீசுடன் இணைந்து அவரது கட்சியினர் செயற்படுவதை காணவில்லை.
கல்முனை செயலகம் பற்றி யாழ்ப்பாண தமிழ் எம் பி பாராளுமன்றில் பேசுகிறார். கிழக்கு மாகாண முஸ்லிம் எம்பீக்கள் அதற்கு பதில் கொடுக்கக்கூட வக்கில்லாமல் உள்ளனர்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி தலைவர்.
Post a Comment