காரைதீவு பகுதியில் சட்ட விரோதமான மதுபான போத்தல்கல்கள்

 காரைதீவு பகுதியில் 

சட்ட விரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கல்கள் பொலிசாரினால் மீட்பு 


சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட காரைதீவு 12 ஆம் பிரிவில் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி  ஒருவரின் வீட்டில்  மறைத்து வைத்து விற்பனைக்காக வைத்திருந்த 80 போத்தல் மதுபான போத்தல்கள் சம்மாந்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது .


சம்மாந்துறை பொலிஸ் பிரிவின்  காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமையான கே.கே. அமரானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் வெள்ளிக்கிழமை இரவு (28) மேற்கொள்ளப்பட் சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான போத்தல்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்பாடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்