BREAKING NEWS

அதாவுள்ளாவின் க‌ட்சிக்குள் குழ‌ப்ப‌ம்.

 


மொட்டு/தே.காங்கிரஸ்/ வடக்கு வாசல்-02

------------------------------------------------------------------

அடுத்த அரசியல் அலசலை ஆறேழு நாட்களின் பின்னரே எழுத எண்ணியிருந்தேன்.என்றாலும் அருமை நண்பர்

அஸ்மி அப்துல் கபூர்(முன்னாள் அக்கரைப்பற்று மாநகரசபை பிரதிமுதல்வர்)அவர்களின் முகநூல் பதிவைப்  பார்வையிட்ட பின்னர் அடுப்பு நூர்வதற்கு முன்னர் அடுத்த ரொட்டியை வீசுவது போல  அவசரமாக இப்பதிவை இடுகிறேன்.

அதாவது 

அஸ்மி குறிப்பிடுவது போல 2015 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 17000 மாக இருந்த தே.கா.கட்சியின் வாக்கு 2020யில் 40000 மாக அதிகரித்திருப்பதாக கணக்கு காட்டுவதுடன் மமதையும் கொள்கிறார் அரசியலில் அனுசரித்து செல்லமுடியாத கட்சிக்காரர்களை அங்கிருந்து அள்ளிக்கு ஓடுங்கள்  என்பது போல  ஆணையுமிடுகிறார்.


2005ம் ஆண்டு கட்சியின் வாக்கு 50000 மாக இருந்ததை அவர்அறிவாரா?


2005 ஜனாதிபதி தேர்தலில் 

மஹிந்த--4887152

ரணில்-4706366 இடைவெட்டில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில்

அரும்பொட்டில் மஹிந்த ஜனாதிபதியாக மாலைசூடிக்கொள்ள உதவியது NCயின்(50000) வாக்குகள் மட்டுமல்ல 2008யில் மாகாணசபையில் 4 ஆசனங்கள் உறுப்புரிமையாக கொண்டிருந்த கட்சியின் வாக்குகள் 2015யில் 17000மாக சரிந்தது

2015 பொதுத்தேர்தலில் முதன்முதலில் களம் கண்ட ACMC கட்சி 33000 வாக்குகளை பெற்றதுடன் 2020யில் அம்பாரைமாவட்டத்தில் 44000வாக்குகளாக அதிகரித்துக் கொண்டது


அரசியல் பாரம்பரியமும், அரிய பலசேவைகளையும் அள்ளிவழங்கிய கட்சி அதிஷ்டவசமாக  பா.உறுப்புரிமையை(TNA,கருணாஅம்மான் பிரிவினால் தமிழ்பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு தே.கா பிரதிநிதிதத்துவம் இம்முறை காப்பாற்றப்பட்டது) தப்பிப்பிழைத்த கணக்காக ஆசனம் பெற்ற காரணங்களை கண்டறியாமல் கட்சியின் கட்டமைப்பில்,கூட்டமைப்பில் ,போக்கில் மாற்றங்கள் செய்வதன் அவசியத்தை கலந்துரையாடல் செய்யாமல்  சாணைத் தைத்துக்கொண்டு,முழத்தை கிழிக்கும் முகநூல் பதிவுகளை இடுகிறார் சொந்த சகோதரர்களை போலிக்கணக்குகளில் இறக்கிவிடுகிறார்.

அவை ஒருபுறம்  இருக்க2020  பாராளுமன்ற பொதுத்தேர்தலில்  EPDP ,CWC,TMVP,NC கட்சிகள் கூட்டுக்கட்சிகள் என்ற வகையில் சேர்ந்தும் தனித்தும் போட்டியிட்டபோதிலும் இவ் SLPP வினால் அவற்றுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன தே.கா.தலைமை தலதா மாளிகைக்கு அழைக்கப்பட்டு அமைச்சுபதவி வழங்குவதாக அலங்காரம்,ஆசை காட்டி அவமானப்படுத்தப்பட்டது அதேநேரம் அரசியலில் அண்மையில் அறிமுகமான அலிஷப்ரி அவர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது எத்தகைய நியாயம் எனப்புரியவில்லை பாடுபட்டவன் பட்டினி கிடக்க பார்த்துக்கிருந்தவனுக்கு  பாலும் சோறும் என்பது போலான பாரபட்சம்

அவமானங்களும்,அடக்குமுறைகளும் அதிகரித்து செல்லும் இவ்வாட்சியுடன் அணிசேர்ந்திருப்பது  எதிர்காலத்திலாவது கட்சிக்கும்,சமூகத்திற்கும்,தலைமைக்கும்

விமோசனத்தைத்தானும் தருமா?

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar