BREAKING NEWS

றிசாட் கைது உட்கட்சி சதி

 உட்கட்சி சதியும்; றிசாட் கைதும்...SLMC யில் இருப்பது போலவே ACMC யிலும் - கட்சியினதும், தலைமையினதும், சமூகத்தினதும் எதிர்ப்பையும் எதிர்பார்ப்பையும் கருத்தில் கொள்ளாமல்  - 20க்கு கையுர்த்திய எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது. அதனால், இந்த விடயத்தை ஒரு விசாரணைக் குழு  அமைத்து விசாரித்து - அக்குழுவின் சிபார்சின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளுவது எனத்தீர்மானிக்கப்பட்டிருந்தது. 


அதன் பிரகாரம், அமீர் அலி (Ex.MP) தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட முன்மொழியப்பட்டது. ஆனால், “நான் இவர்கள் 20க்கு கையுயர்த்தியதிலிருந்து எனது கடும் எதிர்ப்பை காட்டியுள்ளதால்; எனது முடிவில் நேர்மையில்லை என்ற வாதம் வரும். அதனால், என்னை அந்தக் குழுவில் உள்வாங்க வேண்டாம்” என அமீர் அலியே வேண்டிக்கொண்டதால் - சட்டத்தரணி NM. சஹீட் தலைமையில், Ex.MP மஹ்ரூப் மற்றும் Ex.MP ஹுசைன் பய்லா போன்றோரை உள்ளடக்கி 03 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.


இக்குழு 20க்கு கையுயர்த்திய ACMC MPக்களை பலமுறை விசாரணைக்கு அழைத்த போதிலும் - ஏதாவது ஒரு சாட்டுப்போக்கு சொல்லி விசாரணைக்கு சமூகமளிக்காமல் காலம் கடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்பீடத்தைக் கூட்டி  நிலைமைகளை எடுத்து சொல்லி - இறுதித் தீர்மானம் நிறைவேற்றும் உயர் சபையான அச்சபையே இதற்கான இறுதி முடிவினையும் எடுக்குமாறு கூறப்படவிருந்தது.


அப்படி உயர்பீடம் கூட்டப்பட்டிருந்தால் - இந்நேரம் கட்சியிலிருந்து குறித்த  எம்.பிக்கள் நீக்கப்பட்டிருப்பர். அதனால், அவர்களின் எதிர்காலம் அழிந்திருக்கும். எனவே, SLMCயின் அம்பாரை மாவட்ட MP ஒருவரோடு சேர்ந்து - அதிகாரத் தரப்பினருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் பேரிலேயே சகோ. றிசாட் பதியுடீன் கைது செய்யப்பட்டுள்ளார் என்கின்ற விடயம் - அரசியல் வட்டாரத்தில் கசிந்துள்ளது.


SLMC அம்பாரை மாவட்ட MPக்கு இதில் அப்படி என்ன அக்கறை என்று நீங்கள் கேட்கலாம்? அதாவது, ACMCயின் MPக்கள் அவர்களது கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் - அடுத்தது முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தாமும் நிறுத்தப்படுவோம். அப்படி நிறுத்தப்பட்டு - முஸ்லிம் காங்கிரஸில் ஒருவனாக தேர்தலில் நிற்காதுவிடின் - தனக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதனால் - ACMCயின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். அதுதான் SLMC அம்பாரை மாவட்ட MPயின் தேவை.


இவ்வாறு ACMC அவர்களின் MPக்கள் மீது - நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்க ஒரே வழி - றிசாட்டை கைதுசெய்வதுதான். அதற்குத்தான் ஒட்டு மொத்த முஸ்லிம் தீவிரவாதத்தின் முகம் போன்று - றிசாட்டை போதியளவு விற்று வைத்திருக்கிறார்களே. எனவே கைது செய்வது ஒன்றும் அவ்வளவு சிரமம் அல்ல. அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. காலம் தீர்மானிக்கப்பட்டது. கைது நடந்தது என அரசியல் உயர் மட்டங்களில் பேசப்படுகிறது. 


இதற்கான இன்னுமொரு உதாரணமும் கூறப்படுகிறது. அதாவது, 20 ஆவது சரத்துத் திருத்ததின் போதும் - றிசாட் 20க்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் - அந்த அழுத்தங்களை நீக்கி 20க்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கும் வண்ணமே - அப்போது றிசாட் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


இதேநேரம், றிசாடின் தற்போதைய கைதினால் இரண்டு விடயங்களை அரசும் - SLMC & ACMC எம்.பிக்களும் சாதிக்கப்போகிறார்கள்.

01) கட்சிகளில் இருந்து நிறுத்தப்படுவதை தடுத்தல்

02) துறைமுக நகர ஆணைக்குழு வாக்கெடுப்பை SLMC & ACMC எம்.பிக்களுடாக வென்றெடுத்தல்

அதாவது “ஒரு கல்லில் இரு மாங்காய்”


நமது ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போதே - 20 க்கு கையுயர்த்திய SLMC & ACMC MPக்கள் - எந்த பஞ்சமா பாதகங்களுக்கும் துணைபோவார்கள் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. நான் கூறியது சரியாகவே இருக்கிறது. பாருங்கள் தலைவர்களையே பலிகொடுக்கத் தயாராகிவிட்டனர். இப்போது றிசாட். அடுத்தது SLMC தலைவர்.


குறிப்பு:-

நான் இங்கு கூறியுள்ள விடயங்களில் ஒன்றாயினும் பொய்யென யாரும் நிறுவினால் - நான் மொத்தமாக அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார். அதேபோன்று, மஹ்ரூப், அமீர் அலி, ஹுசைன் பய்லா மற்றும் சஹீட் லோயரிடம் விசாரணைக் குழு பற்றி விசாரியுங்கள் )


இது மு.மா.ச.உறுப்பினர் தவத்தின் கட்டுரை. நான் எழுதியிருந்த " கார்டினலை காட்டி மக்கள் திசை திருப்பப்படுகின்றனரா?"  என்ற கட்டுரையில் அ.இ.ம.கா தலைவரின் கைதில் எம்மவர்கள் மீதும் வலுவான சந்தேகங்கள் உள்ளன என இவ் விடயங்களை மையப்படுத்தியே கூறியிருந்தேன்.

Misbahul Haq

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar