BREAKING NEWS

ஜனாதிபதி போரில் நல்லவர் - ஆபத்தை விளைவிக்கும் யாருடைய, ஆலோசனையையும் பின்பற்றாதீர்கள் என எச்சரிக்கிறேன் - ஹேமகுமார

 


நேற்று (30) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட  முன்னாள் ஆளுநரும் ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயிகள் முன்னனியின் தலைவருமான ஹேமகுமார நானாயக்கர தெரிவித்த கருத்துக்கள்.


 ஜனாதிபதியின் முன்மொழிவின் பேரில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மற்றொரு முட்டாள்தனமான மற்றும் ஆபத்தான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது, நேற்று நடந்த மற்றொரு கலந்துரையாடலால் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டது. வேளாண்மை செய்கைக்கான இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு ஆண்டுக்கு ரூ.80 பில்லியன் செலவழிக்கிறது என்று இந்த அரசாங்கம் கூறுகிறது.ஆனால் தற்போதைய சூழ் நிலையில் வேளாண்மை வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் பயிரிட முடியாது. நீண்ட கால செயற் திட்டம் ஒன்றின் பின்னரே இது சாத்தியமாகும்.எடுத்த எடுப்பில் தடை செய்வது பொறுத்தமற்றது.குறைந்தது 15-20 வருட காலம் கொண்ட செயற்பாடாகும்.

ஜனாதிபதி விவசாயத் துறை சார்ந்து கூடியளவு அறிந்திருக்க மாட்டார்கள். அவருக்கு ஆலோசனை கூறுபவர்கள் சரியான விடயங்களைக் கூற வேண்டும்.வேளாண்மையை நன்கு அறிந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். விவசாயம் குறித்த நிபுனர்கள் இதை அறிந்திருக்கிறார்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்த இரசாயன உரங்களும் மற்றும் பூச்சிக்கொல்லிகளும் இல்லாமல் பயிரிட்டால், அறுவடை சாத்தியமற்றது என்று,மரத்தின் இலைகள் மட்டுமே கொட்டைகளாக வளரும்.அறுவடை ஏற்படாது. நான் பசுமை வேளாண்மைக்கு எதிரானவன் அல்ல, ஆனால் பசுமை வேளாண்மை செய்யப்பட வேண்டும், அதற்கு முன்னர் நிலம் பதப்பட வேண்டும்.குறைந்தது 20 ஆண்டுகளாவது செல்லும். பூட்டான் மற்றும் கியூபா ஒரு காபன் வேளாண் நாடாக மாறியது, அது ஓர் தொடர்ச்சியின் நீண்ட நாள் அடைவு.ஜனாதிபதி தனக்குத் தெரியாத ஒன்றைச் செய்தது இதுதான் தவறான முடிவு என்று நினைக்கிறேன்.

ஒரு நாட்டை அழிக்கும் செயற்பாட்டிற்கு உரம் போட வேண்டாம்.இன்றும் கூட பன்டைய மூல தானியங்கள் இல்லை.பசுமைப் புரட்சிக்கு பின்னர் உருமாறிய தானிய வகைகளைத் தான் முழு உலகமும் பயன்படுத்துகிறது.சகல மரக்கறிகளும் அதிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிது. 

தீர்மானங்களை எடுக்கும் போது நிலைபேறான தீர்வுகளை எடுக்க வேண்டும்.எதிர் காலத்தில் நாம் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒன்றை அமைக்கும் போது தற்போது எடுக்கும் விவசாயத் துறை சார்ந்த நல்ல தீர்மானங்களை மாற்றத்திற்குட்படுத்தாமல் முன்கொண்டு செல்வோம். 

இந்த நேரத்தில், நாம் நுகரும் மரக்கறிகள்  ஒரு கலப்பின் சார்ந்த மறக்கரகளாகும்.இது சாத்தியம் இல்லாத யோசனையாகும். இதனால் நாட்டில் ஏற்படும் உணவுப் பஞ்சத்தைத் தடுக்க முடியாது போகலாம்.எனவே பஞ்சம் இருந்தால், அது கொரோனாவை விட ஆபத்தானது. 

தேயிலை உரங்களைப் பயன்படுத்தாமல் தேயிலைத் தோட்டங்களுக்கு நைட்ரஜனைப் பயன்படுத்துவது எப்படி தேயிலைத் தோட்டங்களுக்கு நைட்ரஜனைப் பயன்படுத்துவது ?மற்றும் இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் வருமானத்தைப் பெறுவது எப்படி? 

இந்தக் கொள்கைக்கு ரூ.80 பில்லியன் செலவிட்டால், நாட்டில் உணவுப் பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி செய்ய ரூ .3000 பில்லியனுக்கும் 5000 பில்லியனுக்கும் இடையில் செலவாகும் என சுட்டிக்கட்டினார்.ஆபத்தை விளைவிக்கும் யாருடைய ஆலோசனையையும் பின்பற்ற வேண்டாம் என்று நான் ஜனாதிபதியை எச்சரிக்கிறேன். நாட்டில் உணவுக் கலவரங்கள் ஏறபடும். உணவுப் பற்றாக்குறை இருக்கும்.நான் மரியாதையுடன் சொல்கிறேன், வெறுப்புடனோ கோபத்துடனோ அல்ல, இந்த நாட்டு மக்களின் அன்பின் காரணமாக இந்த தவறான முடிவை மாற்றியமைக்க உங்களை அழைக்கிறேன்.

ஜனாதிபதி போரில் நல்லவர், ஆனால் அவர் விவசாயத்தில் ஒரு  அறியாதவர் நான் போர் குறித்துக் கற்றுக் கொள்ளவில்லை.அவரிடம் நான் போரைப் பற்றி ஆலோசனை எடுக்கத் தயாராக இருக்கிறேன் அவருக்கு எங்களிடமிருந்து ஆலோசனை தேவையில்லை என்னை விட அதிகம் படித்த பேராசிரியர்களிடமிருந்து விவசாயம் குறித்து ஆலோசனையைப் பெறுங்கள் என்று கூறுகின்றேன்.வேளான்மைத் துறையில் நான் முதல் கலாநிதி. இலங்கையில் வேளாண்மையில் பி.எச்.டி பெற்ற வேறொருவர் இல்லை என்று நினைக்கிறேன்.வேளாண்மை பற்றி எனக்குத் தெரியும்.என்றாலும் நாங்கள் சர்வ வல்லமையுள்ளவர்களாக மாறவில்லை. எனவே சர்வ ஆற்றலும் உள்ளவர் போன்று உடனடி தீர்வுகளை எடுக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கூறுகின்றேன்.மஞ்சலை நட்டி வளர்ந்து அறுவடை பெற முதல் தடை செய்ததால் மாற்றீடு இல்லாமல் தீர்மானம் எடுத்ததன் விறைவுகளை நீங்களே ஒரு முறை யோசித்துப் பாருங்கள்.

மைத்திரிபாலவின் நல்லாட்சி அரசாங்கத்தில் விவசாயம குறித்து தீர்மானம் எடுத்த நபர் பல மில்லியன் கணக்கான நஷ்டத்தை ஏற்ப்படுத்தியவர், அதற்கு காரணமான நபர் நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்கு வந்தார். இந்த நபரை ஏன் நோற்றைய கூட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது. விவசாயிகளை தெருக்களுக்கு இழுப்பதை தவிர்க்குமாறு ஜனாதிபதியை அவர் கேட்டுக்கொண்டார்.நீங்கள் ஒரு முட்டாள்தனமான முடிவை எடுக்க வேண்டாம். அது உடனடியாக செயல்படுத்த முடியாத ஓர் நடைமுறை எனவே உங்கள் தீர்மனத்தை  இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar