வெட்டுப்புள்ளி என்றால் என்ன ?
இதை இலகுவாக இப்படி சொல்லலாம் ;
அளிக்கப்படுகின்ற வாக்குகளில் குறித்த வீதத்திற்கு மேல் பெற்றால் மாத்திரமே - எந்தவொரு கட்சிக்கும் அல்லது குழுவிற்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற வரையறையே - வெட்டுப்புள்ளி என்பது . தற்போது வெட்டுப்புள்ளி 5 % ( 1/20 ) ஆக இருக்கிறது இவ்வெட்டுப்புள்ளி 1988 வரை 12.5 % ( 1/8 ) ஆக இருந்தது : 1989 பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் சிறுகட்சிகள் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதில் இந்த 12.5 % வெட்டுப்புள்ளி பெரும் தடையாக / சவாலாக இருந்தது . அதனால் , பாராளுமன்றத்தில் 1989 வரும் வரையான காலப்பகுதியில் பெரும் கட்சிகளே உறுப்பினர்களை கொண்டிருந்தன .
வெட்டுப்புள்ளி பிரயோகம் உதாரணத்தில் : 5 % எனின் ; 100 வாக்குகள் அளிக்கப்பட்டால் இதில் 5 ( 5 % ) வாக்குகளுக்கு மேலே எடுக்கும் கட்சிகளுக்கு / குழுக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கிடைப்பதற்குரிய கணக்கில் எடுக்கப்படுவர் . 12.5 % எனின் ; 100 வாக்குகள் அளிக்கப்பட்டால் இதில் 13 ( 12.5 % ) வாக்குகளுக்கு மேலே எடுக்காதுவிடின் எந்தக் கட்சிக்கோ / குழுவிற்கோ பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்காது .
1988 இல் இவ்வெட்டுப்புள்ளி 12.5 % யிலிருந்து 5 % ஆக குறைக்கப்பட்டது. வெட்டுப்புள்ளி 12.5 % மாக இருக்கும் வரைக்கும் சிறுகட்சிகளுக்கு பாராளுமன்ற தேர்தல்களில் கணிசமான உறுப்பினர்களை வென்றெடுக்கவோ அரசியலில் நிலைத்திருக்கவோ முடியவில்லை.
இவ்வாறு 12.5 % ஆக இருந்த வெட்டுப்புள்ளி 5 % ஆக குறைக்கப்பட்ட பின்னர்தான் மக்கள் முன்னணி , ஜேவிபி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளால் கூட பாராளுமன்ற உறுப்பினர்களை பெற முடிந்தது .
இதன் மூலம் 5 % வெட்டுப்புள்ளியால் முஸ்லிம் கட்சிகள் எந்த நன்மையும் அடையாமல் முஸ்லிம் விரோத போக்குள்ள ஜேவிபி, ஹெல உறுமய என்பனவே நன்மை அடைந்துள்ளன என்பதை உணரலாம்.
United Congress Party
Post a Comment