Posts

Showing posts from May, 2021

5% வெட்டுப்புள்ளியால் முஸ்லிம் ச‌மூக‌ம் ந‌ன்மை பெற‌வில்லை.

Image
  வெட்டுப்புள்ளி என்றால் என்ன ?  இதை இலகுவாக இப்படி சொல்லலாம் ;  அளிக்கப்படுகின்ற வாக்குகளில் குறித்த வீதத்திற்கு மேல் பெற்றால் மாத்திரமே - எந்தவொரு கட்சிக்கும் அல்லது குழுவிற்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற வரையறையே - வெட்டுப்புள்ளி என்பது . தற்போது வெட்டுப்புள்ளி 5 % ( 1/20 ) ஆக இருக்கிறது இவ்வெட்டுப்புள்ளி 1988 வரை 12.5 % ( 1/8 ) ஆக இருந்தது : 1989 பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் சிறுகட்சிகள்  பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதில் இந்த 12.5 % வெட்டுப்புள்ளி பெரும் தடையாக / சவாலாக இருந்தது . அதனால் , பாராளுமன்றத்தில் 1989 வரும் வரையான காலப்பகுதியில் பெரும் கட்சிகளே உறுப்பினர்களை கொண்டிருந்தன .  வெட்டுப்புள்ளி பிரயோகம் உதாரணத்தில் :  5 % எனின் ; 100 வாக்குகள் அளிக்கப்பட்டால் இதில் 5 ( 5 % ) வாக்குகளுக்கு மேலே எடுக்கும் கட்சிகளுக்கு / குழுக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கிடைப்ப‌த‌ற்குரிய‌ க‌ண‌க்கில் எடுக்க‌ப்ப‌டுவ‌ர் . 12.5 % எனின் ; 100 வாக்குகள் அளிக்கப்பட்டால் இதில் 13 ( 12.5 % ) வாக்குகளுக்கு மேலே எடுக்காதுவிடின் எந்தக் கட்சிக்கோ / குழுவிற்கோ பாராளுமன்ற உ

நிலையான கொள்கையற்ற காங்கிரஸ்

Image
  இன்றைய வீரகேசரி – 30.05.2021 *************************************** நிலையான கொள்கையற்ற காங்கிரஸ் எம்.எஸ்.தீன் - முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவொரு விவகாரத்திலும் நிலையான கொள்கை கிடையாதென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பற்றிய பிரச்சினையாக இருந்தாலும், முஸ்லிம்களின் சுயநிர்ணய அதிகாரம் பற்றிதாக இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம், அரசியல் யாப்பு தொடர்புடையவையாக இருந்தாலும் அக்கட்சிக்கு நிலையான கொள்கை கிடையாது என்பதனை அக்கட்சியின் தீர்மானங்களும், பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளும் எடுத்துக் காட்டுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தாலும் அல்லது தனித்தனியே பிரிந்தாலும் முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் அதிகார அலகு அமைய வேண்டுமென்று கட்சியின் ஆரம்ப காலத்தில் தெரிவிக்கப்பட்டன. ஆயினும், இக்கொள்கை சுருங்கி முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்கிழக்கு அலகு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. பின்னர் அம்பாரை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களை உள்ளடக்கிய கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்று கொள்கை மாறியது. முஸ்லிம்களுக்கு தனிஅதிகார அலகு, தென்கிழக்கு அலகு, கரையோர மாவ

அதாவுள்ளாவின் க‌ட்சிக்குள் குழ‌ப்ப‌ம்.

Image
  மொட்டு/தே.காங்கிரஸ்/ வடக்கு வாசல்-02 ------------------------------------------------------------------ அடுத்த அரசியல் அலசலை ஆறேழு நாட்களின் பின்னரே எழுத எண்ணியிருந்தேன்.என்றாலும் அருமை நண்பர் அஸ்மி அப்துல் கபூர்(முன்னாள் அக்கரைப்பற்று மாநகரசபை பிரதிமுதல்வர்)அவர்களின் முகநூல் பதிவைப்  பார்வையிட்ட பின்னர் அடுப்பு நூர்வதற்கு முன்னர் அடுத்த ரொட்டியை வீசுவது போல  அவசரமாக இப்பதிவை இடுகிறேன். அதாவது  அஸ்மி குறிப்பிடுவது போல 2015 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 17000 மாக இருந்த தே.கா.கட்சியின் வாக்கு 2020யில் 40000 மாக அதிகரித்திருப்பதாக கணக்கு காட்டுவதுடன் மமதையும் கொள்கிறார் அரசியலில் அனுசரித்து செல்லமுடியாத கட்சிக்காரர்களை அங்கிருந்து அள்ளிக்கு ஓடுங்கள்  என்பது போல  ஆணையுமிடுகிறார். 2005ம் ஆண்டு கட்சியின் வாக்கு 50000 மாக இருந்ததை அவர்அறிவாரா? 2005 ஜனாதிபதி தேர்தலில்  மஹிந்த--4887152 ரணில்-4706366 இடைவெட்டில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் அரும்பொட்டில் மஹிந்த ஜனாதிபதியாக மாலைசூடிக்கொள்ள உதவியது NCயின்(50000) வாக்குகள் மட்டுமல்ல 2008யில் மாகாணசபையில் 4 ஆசனங்கள் உறுப்புரிமையாக கொண்டிருந்த கட்சி

காரைதீவு பகுதியில் சட்ட விரோதமான மதுபான போத்தல்கல்கள்

 காரைதீவு பகுதியில்  சட்ட விரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கல்கள் பொலிசாரினால் மீட்பு  சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட காரைதீவு 12 ஆம் பிரிவில் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி  ஒருவரின் வீட்டில்  மறைத்து வைத்து விற்பனைக்காக வைத்திருந்த 80 போத்தல் மதுபான போத்தல்கள் சம்மாந்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது . சம்மாந்துறை பொலிஸ் பிரிவின்  காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமையான கே.கே. அமரானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினரினால் வெள்ளிக்கிழமை இரவு (28) மேற்கொள்ளப்பட் சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான போத்தல்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்பாடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கலாபூஷணம் மு.பஷீர் காலமானார்

Image
  ( மினுவாங்கொடை நிருபர் )    மூத்த எழுத்தாளரும், ஸ்ரீல.மு.கா. மூத்த போராளியும், மினுவாங்கொடை தொகுதி ஆரம்பகால அமைப்பாளருமான கலாபூஷணம் மு.பஷீர், (28) வெள்ளிக்கிழமையன்று, கல்லொழுவையில் காலமானார். சிங்களச் சூழல் நிறைந்த கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை பிரதேசத்தின் கல்லொழுவை எனும்  கிராமத்தில் 1940 இல் பிறந்த மு.பஷீர், தனது 82 ஆவது வயதில் இறையடி எய்தினார்.    பஷீரின் படைப்புக்கள் பல, தேசிய ரீதியில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. பல விருதுகளையும் அவர் பெற்றிருக்கின்றார். "மீறல்கள்",  "தலைமுறை இடைவெளி" என இரண்டு சிறு கதை நூல்களை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் "வாழும் கதைகள்" (சிறு கதைகள் மீள் அறிமுக) நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக வழங்கி இருக்கின்றார்.     1999 ஆம் ஆண்டில் அரசின் "கலாபூஷணம்" விருதைப் பெற்றுள்ளார். கொழும்பில் (2002)  இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிறந்த படைப்பாளிகளுக்கான விருதையும், பொற்கிழியையும் பெற்றார்.     "சிறுகதை, கவிதை, ஆய்வு" என, முத்திரை பதித்துள்ள இவர், ஐந்து பெண் பிள்ளைகளுக்கு

கல்முனைக்குடியும் கல்முனையும்

Image
  :::::::::::::*::::::::*:::::::::::::::::::::::::::::::::::::: அரங்கம் இணையத்தளதளத்தில் தம்பியப்பா கோபலகிருஸ்ணன் அவர்கள் எழுதிய கட்டுரையினை வாசித்த போது இந்த கட்டுரையினை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது... ------------------------------------------------ எம்.எம்.றியாஸ்             @3.00am பலர் தொடாத பக்கமாகவும் அரசியல் வாதிகள் அடிக்கடி தொடுகின்ற பக்கமாகவும் கல்முனை விவகாரம் காணப்பட்ட போதிலும் தம்பியப்பாவின் கட்டுரையினை வாசிக்கும் போது எழுந்த கேள்விக் கணைகளுக்கு விடை தேடிப் புறப்பட்டேன்... கல்முனையும் கல்முனைக் குடியும் ஒன்றா வேறுவேறா? ? தம்பியப்பாவின் கருத்துப்படி கல்முனை என்பது தாளவட்டுவான் வீதியிலிருந்து தரவைப் பிள்ளையார் வீதி வரை எனக் குறிப்பிடுகின்றார். அதற்கு அவர் வைக்கும் ஆதாரம் கிராம சேவக பிரிவுகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள். கல்முனைக் குடி என்பது தரவைப் பிள்ளையார் வீதியிலிருந்து ஸாஹிறாக் கல்லூரி வரையானது என்று கூறும் அவர் கல்முனை வேறு கல்முனைக் குடி வேறு என்று சுட்டிக்காட்டுகிறார். இந்த விடயமாக முஸ்லீம்கள் தமது வர்த்தகம் செய்யும் பிரதேசம் கல்முனை என்றும் தாம் குடியிருக்கு

نشاطات حزب العلماء المسلمين سري لانكا

Image
  ان حزب العلماء يتحدث عن وحدة المجتمع المسلم منذ نشأته وضرورة العيش مع السنهاليين والتاميل الذين يعيشون في هذا البلد.  كما يؤكد حزبنا على السياسة الروحية ، فإنه يروج لسياسة خالية من الكذب والخداع والاحتيال والخداع.  ليس ذلك فحسب ، بل تستمر في الدعوة إلى توحيد جميع المسلمين ، بغض النظر عن اختلافاتهم الطائفية.  لقد أسس حزب العلماء نفسه كحزب ضد أي تطرف وإرهاب في هذا البلد.  ونتيجة لذلك ، كان حزب العلماء يدعم بشكل مباشر الرئيس السابق ماهيندا راجاباكسي منذ عام 2005 ، الذي أدان الإرهاب بشكل مباشر وسعى إلى إنهاء الحرب.  الإرهاب يعني أن حزب العلماء لن يقبل بأي تطرف سواء أكان سنهاليًا أم تاميلًا أم مسلمًا.  يواصل حزبنا إدانة كافة أشكال العنصرية والتطرف والإرهاب.  ننصح المسلمين دائمًا بقبول سياسي غالبية السنهاليين في هذا البلد ، والاستمرار في إخبار الناس بمبدأ أن على المسلمين اتباع سياسة المصالحة وأن كل ما يفعلونه يجب ألا يؤدي إلى صراع عرقي.  كما يدعو حزب العلماء إلى إحلال السلام في البلاد وخلق التفاهم بين الناس من جميع الأعراق من خلال كونه "لنكن سريلانكيين" الشيخ- مبارك عبد المجيد مت

MP ப‌த‌விக‌ளைக்கூட ACMC‌ க‌ட்சியால் ப‌றிக்க‌ முடியாது.

Image
  பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளான‌ இஷாக் ர‌ஹ்மான், அலி ச‌ப்ரி ர‌ஹீம் ஆகிய‌ இருவ‌ரையும் அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ், க‌ட்சியிலிருந்து நீக்க‌வுள்ள‌தாக‌ செய்திக‌ள் வெளி வ‌ருகின்ற‌ன‌. உண்மையில் இவ்விருவ‌ரும் மேற்ப‌டி அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌சின் உறுப்பின‌ர் ப‌த‌வியில் உள்ளார்க‌ளா என்ப‌து  முக்கிய‌ கேள்வியாகும். இஷாக் ர‌ஹ்மான் க‌ட‌ந்த‌ தேர்த‌லின் போது, தான் ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் அல்ல‌, ச‌ஜித்தின் க‌ட்சிக்கார‌ன் என‌ மேடைக‌ளில் சொல்லியிருந்தார். அதே போல் அலி ச‌ப்ரி ர‌ஹீமும் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ த‌னிக்க‌ட்சியின் பிர‌திநிதியாக‌வே பாராளும‌ன்ற‌த்தில் உள்ளார். க‌ட‌ந்த‌ தேர்த‌லின் போது புத்த‌ள‌த்துக்கு எம் பி கிடைக்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ மு.காவும் ம‌.காவும் வாட‌கைக்கு எடுத்த‌ க‌ட்சியில் வேட்பாள‌ர்க‌ளை நிறுத்தினார்க‌ள். அப்போதே நாம் கூறினோம் இது முர‌ண்பாடுக‌ளை உருவாக்கும் என‌. ம‌. காவின‌ருக்கு ச‌ரியான‌ அர‌சிய‌ல் அறிவு இருந்திருந்தால் வெற்றியோ தோல்வியோ அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் த‌ம‌து க‌ட்சி சின்ன‌த்தில் வேட்பாள‌ர்க‌ளை நிறுத்தியது போல் புத்த‌ள‌த்திலும் நிறுத்தியிருக்க‌லாம். பிரிந்து போட்டியிட்டால் பிர‌திநிதி

PALESTINE STATE AND HUMAN RIGHTS

Image
   A.R.D. Muzammil Diplama in International Relation Bandaranayake international Study Center  Colombo  Since deprivation of Palestine state, in 1948 Israel was created by so-called the cause of champion of human rights America and savior of the Democracy Britain in Palestine soil that time it was an illegal state declare by united nation human right chart. When Palestinian became a Zionist state in Middle East soil. No Arab countries could prevent. At the same time why most of the Arab countries didn't drop been created Zionist state in middle east soil. When human right chart was established in UNO in favor if Israel Humanitarian democratic state didn't oppose and behalf if the Palestine people. The human right chart also was done an injustice against the Palestinian people their basic mother land also deprive about Palestinian people. In 214 century no one has talked or either anyone didn't support for their just cause of the oppress the Palestinian peopie in this e

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

Image
  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

அதாவுள்ளாவின் க‌ல்முனைக்கான‌ வ‌ர்த்த‌மாணியை வீசிய‌ ப‌ள்ளிவாய‌ல் நிறுவ‌ன‌ம் இப்போது கெஞ்சுகிற‌து

Image
  முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் முக்கிய கோரிக்கை !! நூருல் ஹுதா உமர்  கல்முனையில் உள்ள மக்களின் பூர்விகம், கல்முனை வரலாறு, கல்முனையின் எல்லைகள், கல்முனை வாழ்மக்களின் வாழ்வாதாரம், கல்முனை வாழ் மக்களின் பாசப்பிணைப்பு என எதையும் அறியாமல் வெளிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் கல்முனையை பற்றி பிழையான சித்தரிப்புக்களை செய்துகொண்டு வருகிறார்கள். கடந்த காலத்தை போன்று ஸ்ரீ.மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் மு.கா. எம்.பிக்களும், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களும் அ.இ.ம.கா. இரண்டாம் நிலை தலைவர்களும் இதுவிடயமாக ஒருமித்த குரலில் போராடி எமக்கான நியாயத்தை உறுதிப்படுத்த வேண்டும். என அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம்.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.  அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கல்முனை கிளை, சுன்னத் வல் ஜமாஅத் என்பன இணைந்து இன்று (07) கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 

முன்னாள் எம் பி ந‌சீருக்கு க‌ண்கெட்ட‌பின் ஞான‌ம்.

Image
  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டது தவறு என்று இப்போது வருந்துகிறேன் ; முன்னாள் எம்.பி நஸீர்  நூருல் ஹுதா உமர்  முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களை மறந்து சகிப்புத் தன்மையுடன் இன ஒற்றுமைக்காக விட்டுக் கொடுப்புகளை செய்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் போன்ற தமிழ் அரசியல் வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்படுகின்றனர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். இன்று (05) அட்டாளைச்சேனையில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் 30 ஆண்டு காலமாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். கல்முனையில் இருக்கின்ற பிராந்திய சுகாதார பணிமனை முஸ்லிம்களுக்கு மாத்திரம் சேவை செய்யும் நிலையமல்ல இங்கு தமிழ் பேசும் மக்களுக்கான சேவை நடைபெறுகிறது. இதன் பணிப்பாளராக ஒரு தமிழ் சகோதரர் கடமையாற்றுகின்றார். இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற ஒரேயொரு வர்த்தக கேந்திர நிலையம் கல்முனையாகும். தமிழர்களுக்கு என்று மட்டக்களப்பு, வவுண

றிசாட் கைது உட்கட்சி சதி

Image
 உட்கட்சி சதியும்; றிசாட் கைதும்... SLMC யில் இருப்பது போலவே ACMC யிலும் - கட்சியினதும், தலைமையினதும், சமூகத்தினதும் எதிர்ப்பையும் எதிர்பார்ப்பையும் கருத்தில் கொள்ளாமல்  - 20க்கு கையுர்த்திய எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது. அதனால், இந்த விடயத்தை ஒரு விசாரணைக் குழு  அமைத்து விசாரித்து - அக்குழுவின் சிபார்சின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளுவது எனத்தீர்மானிக்கப்பட்டிருந்தது.  அதன் பிரகாரம், அமீர் அலி (Ex.MP) தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட முன்மொழியப்பட்டது. ஆனால், “நான் இவர்கள் 20க்கு கையுயர்த்தியதிலிருந்து எனது கடும் எதிர்ப்பை காட்டியுள்ளதால்; எனது முடிவில் நேர்மையில்லை என்ற வாதம் வரும். அதனால், என்னை அந்தக் குழுவில் உள்வாங்க வேண்டாம்” என அமீர் அலியே வேண்டிக்கொண்டதால் - சட்டத்தரணி NM. சஹீட் தலைமையில், Ex.MP மஹ்ரூப் மற்றும் Ex.MP ஹுசைன் பய்லா போன்றோரை உள்ளடக்கி 03 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இக்குழு 20க்கு கையுயர்த்திய ACMC MPக்களை பலமுறை விசாரணைக்கு அழைத்த போதிலும் - ஏதாவது ஒரு சாட்டுப்போக்கு சொல்லி விசாரணைக்கு சமூகமளிக்காமல் காலம் கடத்தப்பட்டு

க‌ட‌ந்த‌ ஆட்சியில் ப‌ல‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள், பி. அமைச்ச‌ர்க‌ள் இருந்தும் க‌ல்முனை செய‌ல‌க‌த்தை தாள‌வெட்டுவானால் சின்ன‌ விட‌ய‌த்தைக் கூட‌ செய்ய‌வில்லை

Image
  கிழ‌க்கு மாகாண‌த்தில் த‌மிழ் அமைச்ச‌ர்க‌ள் இருந்த‌து மிக‌ குறைவு. முஸ்லிம் எம்பீக்க‌ளே அதிக‌ம் அமைச்ச‌ர்க‌ளாக‌ இருந்த‌துண்டு. 1989ம் ஆண்டு அமைச்ச‌ராக‌ இருந்த‌ தேவ‌நாய‌க‌ம் க‌ல்முனையில் க‌ர‌வாகு வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் ஒன்றை உருவாக்கும்ப‌டி அம்பாரை அர‌ச‌ அதிப‌ருக்கு க‌ட்ட‌ளையிட்டிருந்தார். அது அமைச்ச‌ரின் க‌ட்ட‌ளைதானே த‌விர‌ அத‌ற்குரிய‌ வ‌ர்த்த‌மாணி வ‌ந்த‌தாக‌ தெரிய‌வில்லை. ஆனாலும் தேவ‌நாய‌க‌ம் த‌ன் ச‌மூக‌த்துக்கு ஏதாவ‌து செய்ய‌ வேண்டும் என‌ முய‌ற்சி செய்த‌தை பாராட்ட‌த்தான் வேண்டும். 89ல் க‌ல்முனையின் அமைச்ச‌ராக‌ ஏ ஆர் எம் ம‌ன்சூர் இருந்தும் இத‌னை த‌டுக்க‌வில்லை. அத‌ன் பின்  1989 தொட‌க்க‌ம் முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் அஷ்ர‌ப் எம் பியாக‌ க‌ல்முனையை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தினார். அவ‌ராவ‌து க‌ரைவாகு வ‌ட‌க்கின் எல்லை எது என்ப‌தை த‌ன‌து நேச‌த்துக்குரிய‌வ‌ராக‌ இருந்த‌ ஜ‌னாதிப‌தி பிரேம‌தாச‌ மூல‌ம் வ‌ர்த்த‌மாணி வெளியிட்டிருக்க‌லாம். செய்ய‌வில்லை. 94 முத‌ல் அஷ்ர‌ப் பெரும் ப‌ல‌ம் வாய்ந்த‌ அமைச்ச‌ராக‌ இருந்த‌ போதும் இது விட‌ய‌த்தில் எதுவும் செய்ய‌வில்லை. அத‌ன் பின் ர‌வூப் ஹ‌க்கீம் கெபின‌ட

வெளிச்சக்திகளே கல்முனை தமிழ் மக்களை குழப்புகிறது- கல்முனை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர்

Image
  எங்களின் பிரச்சினையை நாங்கள் பேசி தீர்ப்போம் : வெளிச்சக்திகளே கல்முனை தமிழ் மக்களை குழப்புகிறது- கல்முனை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர்.  நூருல் ஹுதா உமர்.  பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் தமிழ் முஸ்லிம் உறவை சங்கடப்படுத்தி சகோதரத்துவத்தை சீரழிப்பது போன்று பொய்யான நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறார். இப்படியான ஒரு அநியாயமிக்க காரணியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் இருக்கக்கூடாது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எல்லா சமூகத்தினதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு யாருக்கும் அநீதி இடம்பெறாத வகையில் கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்படும் என கல்முனை மாநகர பிரதிமுதல்வரும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.  அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்குமுகமாக கல்முனை கட்சி காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வா

ஜனாதிபதி போரில் நல்லவர் - ஆபத்தை விளைவிக்கும் யாருடைய, ஆலோசனையையும் பின்பற்றாதீர்கள் என எச்சரிக்கிறேன் - ஹேமகுமார

Image
  நேற்று (30) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட  முன்னாள் ஆளுநரும் ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயிகள் முன்னனியின் தலைவருமான ஹேமகுமார நானாயக்கர தெரிவித்த கருத்துக்கள்.  ஜனாதிபதியின் முன்மொழிவின் பேரில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மற்றொரு முட்டாள்தனமான மற்றும் ஆபத்தான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது, நேற்று நடந்த மற்றொரு கலந்துரையாடலால் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டது. வேளாண்மை செய்கைக்கான இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு ஆண்டுக்கு ரூ.80 பில்லியன் செலவழிக்கிறது என்று இந்த அரசாங்கம் கூறுகிறது.ஆனால் தற்போதைய சூழ் நிலையில் வேளாண்மை வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் பயிரிட முடியாது. நீண்ட கால செயற் திட்டம் ஒன்றின் பின்னரே இது சாத்தியமாகும்.எடுத்த எடுப்பில் தடை செய்வது பொறுத்தமற்றது.குறைந்தது 15-20 வருட காலம் கொண்ட செயற்பாடாகும். ஜனாதிபதி விவசாயத் துறை சார்ந்து கூடியளவு அறிந்திருக்க மாட்டார்கள். அவருக்கு ஆலோசனை கூறுபவர்கள் சரியான விடயங்களைக் கூற வேண்டும்.வேளாண்மையை நன்கு அறிந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதைப் பற்றி அறிந