Skip to main content

சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா?

 ரிஷாட் வீட்டில் செயலிழந்த சிசிடீவி கெமரா!  - நீதிமன்றில் தெரிவித்த தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பயணியாற்றிய சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா? என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த சிறுமி கடந்த 3ம் திகதி அதிகாலை 6.45 அளவிலேயே தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் முற்பகல் 8.20 அளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், குறித்த சிறுமி 1990 அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக தாமதமாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை, குறித்த

முஸ்லிம் கட்சிகளுக்குள் பிளவா? நாடகமா?

 


Virakesari 04.04.2021


************************

எம்.எஸ்.தீன் -


அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 20வது திருத்தச் சட்ட மூலத்தின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. 


பொதுக் கூட்டங்களிலும், கட்சியின் உயர்பீடக் கூட்டங்களிலும் இக்கட்சிகளின் தலைவர்களாகிய ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன் ஆகியோர்கள் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கும் தங்களுக்கும், கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை.


பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் இஸ்டம் போல் நடந்து கொண்டார்கள். அதனால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். விசாரணைகளை மேற்கொள்வற்காக  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கின்றார்கள்.


இக்கருத்தக்களின் ஊடாக இவர்கள் தமது கட்சி ஆதரவாளர்களின் உணர்வுகளுக்கு ஆறுதலைகளை வழங்குவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆதவாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துக் கொண்டாலும் நடைமுறைப்படுத்துவதில் காலதாமதங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன.


இதே வேளை, தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கருத்துக்களை பார்க்கின்ற போது இரு கட்சிகளுக்குள்ளும் மிகப் பெரியளவில் முரண்பாடுகள் உள்ளதாகவே இருக்கின்றன. இதனால், இரு கட்சிகளுக்குள்ளும் பிளவுகள் ஏற்படுவதற்குரிய சாத்தியங்களே இருப்பதாகவே வெளிப்படையாகத் தெரிகின்றன.


ஆயினும், தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தனியறைகளில் மகிழ்ச்சியாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால், இக்கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு ஆணை வழங்கியவர்களை ஏமாற்றுவதற்காக நாடகம் ஆடிக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.


நானே தலைவர்

---------------------

கடந்த 2021 மார்ச் 27ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது அவர் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றிக்கும் சென்றிருந்தார். ஆனால், அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிலரஸின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவுமில்லை. அவர்களை ரவூப் ஹக்கீம் கலந்து கொண்ட நிகழ்வுகளில் காண முடியவுமில்லை.


இந்த விஜயத்தின் போது சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபவத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போது 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றியும், கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்தமைக்கான காரணம் குறித்தும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும் மிகவும் காரசாரமான கருத்துக்களை முன் வைத்தார்.  


கட்சித் தலைமையின் நம்பகத் தன்மை குறித்து கட்சிக்குள் இருந்தே நிறையப் பேர் தங்கள் பக்கம் நியாயங்களை பேசுவது மாதிரி நேரடியாக தலைமையை மலினப்படுத்துவது மாதிரி பேசி வருகின்றார்கள். ஆட்சியாளர்களுக்கு சாமரசம் வீசுவதற்கும், அவர்களை திருப்திப்படுத்துவதற்கும் ஓர் அளவு இருக்கின்றது. ஜனாஸா அடக்கம் சர்வதேச மயப்படுத்தப்பட்டதனால்தான் தீர்வு கிடைத்தது. இப்போது சிலர் ஜனாஸா அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு சென்று படம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியையும், என்னiயும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர்களும் இருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியாளர்களின் எடுப்பார் கைப்பிள்ளை போன்று இருக்காது. இதுதான் அவர்களின் பிரச்சினை என்று அக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.


இவ்வாறு பொது மேடையில் ரவூப் ஹக்கீம் ஆவேசமாக கருத்துக்களை முன் வைத்தாலும், அதன் நோக்கம் கட்சியின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவும், அவர்களை தம்மோடு வைத்துக் கொள்ளவுமே ஆகும். ஆந்த உரையின் போது 'கட்சியின் ஆதரவாளர்களின் செல்வாக்கு உள்ளவரையும் நானே தலைவராகவே இருப்பேன்' என்று இக்கூட்டத்தில் தெரிவித்தமையும் குறிப்பிட்டு நோக்க வேண்டியதொரு விடயமாகும்.


இதே வேளை, 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பொது வெளியில் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தாலும் அவை ஒரு திட்டமிட்ட நாடகம் என்றே கூறுதல் வேண்டும்.

மறுபுறத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தலைவரோடும், பாராளுமன்ற உறுப்பினர்களோடும் இரு வேறு குழுக்களாக பிரிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.


இதனால், தலைவர் அணியாக சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்களின் அணியாக சிலரும் செயற்படுவதனை அவதானிக்கும் போது கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு விடுமோ என்று எண்ணவும் தோன்றுகின்றது.


இதனிடையே ரவூப் ஹக்கீம் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருக்க முடியாது. புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டுமென்ற கருத்துக்களையும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அணியினர் ஆங்காங்கே தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால்தான் கட்சியின் ஆதரவாளர்களின் ஆதரவு உள்ளவரை நான் கட்சியின் தலைவராகவே இருப்பேன் என்று ரவூப் ஹக்கீம் பல இடங்களில் தெரிவித்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் கட்சியின் தலைவராக வேண்டுமென்ற முயற்சியை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. நசீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகிச் சென்ற போது, ரவூப் ஹக்கீமின் தலைமைப் பதவிக்கு சவால் விட்டிருந்தார். ஆயினும், அவரினால் ரவூப் ஹக்கீமை தலைமை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை.


இந்நிலையில்தான் அவர் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். பிரதித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. இவரை கட்சியில் இணைத்துக் கொண்டதன் பின்னரே தவிசாளராக செயற்பட்ட பசீர் சேகுதாவூதை ரவூப் ஹக்கீம் மெல்லமெல்ல கைநழுவினார். அத்தோடு, முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியையும் கட்சியை விட்டு தூரமாக்கினார். இவர்கள் இருவரும் ரவூப் ஹக்கீம் தலைவர் பதவியில் நிலைத்திருப்பதற்கான அனைத்து சூச்சுமங்களையும் செய்தவர்கள் என்பது கட்சியின் ஆதரவாளர்களுக்கு பெரும்பாலும் தெரியாத விடயமாகும்.


'வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா' என்பதே பசீர் சேகுதாவூத், ஹஸன்அலி ஆகியோர்களின் நிலையாகும். 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்று கூறுதலே இவ்விடத்தில் பொருத்தமாகும்.

இப்போது கட்சியின் தலைவருக்கு எதிராக நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளம்பியுள்ளார்கள். இவர்களில் இருவர் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஆட்சியாளர்களின் உதவியுடன் ரவூப் ஹக்கீமை தலைவர் பதவியிலிருந்து தூக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.


இதே வேளை, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸை கட்சியின் தலைவராகக் கொண்டு வரவேண்டுமென்றதொரு முயற்சியும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. இவர்களின் இந்த முயற்சி வெற்றியடையும் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்குரிய திட்டங்கள் இரகசியமாக தீட்டப்பட்டுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முஸரப் ஆகியோர்கள் இன்றைய ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் ஒரு அணியில் போட்டியிடுவதற்கு மற்றுமொரு திட்டம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.


இத்தகைய நிலைமைகளை கவனத்திற் கொண்டே, முஸ்லிம் காங்கிரஸிற்கு அதிகபட்ச ஆதரவுள்ள அம்பாரை மாவட்டத்திற்கு ரவூப் ஹக்கீம் விஜயம் செய்து கட்சியின் உள்ளுர் பிரமுகர்கள், முன்னாள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களோடு இணைந்து கட்சியின் ஆதரவாளர்களின் நாடித்துடிப்பை அளந்து கொள்வதற்காக பல இடங்களுக்கும் விஜயம் செய்திருந்தார்.


தடுமாற்றம்

---------------

20வது திருத்தச் சட்ட மூலத்தின் பின்னர் நெருக்கடிளையும், விமர்சனங்ளையும் எதிர்கொள்ளும் மற்றுமொரு கட்சியாகி மக்கள் காங்கிரஸ் இவ்விடயத்தின் தடுமாறிக் கொண்டிருப்பதாகவே இருக்கின்றது. ரவூப் ஹக்கீம் கட்சியின் ஆணி வேராகவுள்ள கிழக்கு மாகாணத்தில் ஆதரவாளர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். அத்தகையதொரு முயற்சியை மக்கள் காங்கிரஸின் தலைவர் மேற்கொள்ளவில்லை.


மக்கள் காங்கிரஸிற்கும் கிழக்கு மாகாணம் முக்கியமானதொரு தளமாகும். கடந்த பொதுத் தேர்தலில் இக்கட்சி மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தோல்வியடைந்த போதிலும், அம்பாரை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொண்டது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் காங்கிரஸிற்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும்தான் போட்டியாகும்.


இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட கட்சியினதும், தலைவரினதும் சம்மத்தைப் பெற்றுக் கொள்ளாமலேயே 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கும், அதன் உபபிரிவாகிய 17இற்கும் ஆதரவாக வாக்களித்தார்கள். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்படும் என்று கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீன் சூளுரைத்தாலும், ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒரு குழுவை நியமித்தாலும் அவை வெறும் கண்துடைப்பும், கட்சியின் ஆதரவாளர்களின் 'உணர்வுப் பசிக்குரிய தீனியாகவுமே' இருக்கின்றது.


றிசாட் பதியூதீன்  ரவூப் ஹக்கீம் போன்று தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு தடுமாறிக் கொண்டிருக்கின்றார். 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள தமது கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை எம்மோடு இணைத்துக் கொள்ளமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.


இதே வேளை, 20வது திருத்தச் சட்ட மூலத்தின் உபபிரிவாகிய இரட்டைப் பிரஜா உரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கின்ற 17ஆம் பிரிவுக்கு மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஸரப் ஆதரவு வழங்கியிருந்தார். ஆயினும், கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீன் 17ஆம் பிரிவுக்கு ஆதரவு வழங்கியவரையும் எம்மோடு இணைத்துக் கொள்ளமாட்டோம் என்று தெரிவிக்கவில்லை. இதன் மூலம் அவர் முஸரப்புக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று கருதுவதற்கும் அல்லது தலைவரின் அனுமதியுடனே முஸரப் ஆதரவாக செயற்பட்டுள்ளார் என்று முடிவு செய்து கொள்வதற்கும் முடியுமாக இருக்கின்றது.


கொழும்பில் 2021 மார்ச் 28ஆம் திகதி நடைபெற்ற மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டில் றிசாட் பதியூதீனுடன் முஸரப்பும் கலந்து கொண்டார். அதுவும் இரண்டு பேரும் நீல நிற சேர்ட் அணிந்திருந்தார்கள். இதன் மூலமாக தங்களுக்கு இடையேயுள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். இதே வேளை, மக்கள் காங்கிரஸின் ஏனைய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய இஸாக் ரஹ்மான், அலிசப்ரி ஆகியோர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.


ஆகவே, கட்சியின் தலைவரின் முடிவுக்கு மாற்றமாக 20வது பிரிவுக்கும், அதன் உபபிரிவாகிய 17இற்கும் ஆதரவு அளித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கு மன்னிப்பும், இரண்டு பேரை கட்சியோடு இணைத்துக் கொள்ளமாட்டோம் என்று தெரிவித்துள்ளமை மூலமாக றிசாட பதியூதீனும், மக்கள் காங்கிரஸும் பாரபட்சமாக நடந்து கொள்கின்றது. 


இதே வேளை, றிசாட் பதியூதீன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் முஸரப்பும் பசில் ராஜபக்ஷவுடன் நெருக்கமாக இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக றிசாட் பதியூதீன் முஸரப்புடன் இணைந்து நாடகமாடிக் கொண்டிருப்பதாகவே இருக்கின்றது.


இதே வேளை, மக்கள் காங்கிரஸின் உள்ளுர் பிரமுகர்களிடையே பலத்த முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதனை வெளிப்படையாகவே உணர்ந்து கொள்ள முடிகின்றது. குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் இதனை தெளிவாக உணரு முடிகின்றது. இதற்கு மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனே காரணமாகும்.


கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களிடையே பலத்த முரண்பாடுகளும், பிரதேசவாதமும் காணப்பட்டன. அது பற்றி கட்சியின் முக்கிய ஆதரவாளர்கள் எடுத்துக் கூறியும் அதற்குரிய தீர்வினை எடுக்கவில்லை. மாறாக ஒவ்வொரு பிரதேசத்திற்கும் விஜயம் செய்து அப்பிரதேசங்களுக்கு ஏற்றவாறு பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி றிசாட் பதியூதீன் தேர்தல் பிரச்சாரங்களில் பாரபட்சமான தன்மைகளும் வெளிப்பட்டன. இதனை மக்கள் காங்கிரஸின் உள்ளுர் பிரமுகர்கள் இப்போது தெளிவாக உணரத் தொடங்கியுள்ளார்கள்.


ஒழுக்காற்று நடவடிக்கை

--------------------------------

இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்தாலும், ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கமாட்;டாது என்பதே தற்போதைய நிலையாகத் தெரிகின்றது.


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால், அவர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்துவிடுவார்கள். அதனால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று தெரிவித்து கட்சியின் ஆதரவாளர்களை திருப்திபடுத்துவதே ஒரே வழியாகும் என்று முஸ்லிம் காங்கிரஸினதும், மக்கள் காங்கிரஸினதும் உயர்பீட உறுப்பினர்களில் சிலர் தெரிவித்துள்ளார்கள்.


மேலும், ஆளும் கட்சி மோகத்தைக் கொண்ட உயர்பீட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இவ்விரு கட்சிகளிலும் உள்ளார்கள். இவர்கள் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நெருக்கமாக இருக்கின்றார்கள். ஆளும் தரப்பினர் மூலம் பெற்றுக் கொள்ளும் கொந்தராத்து வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.


இத்தகையவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆளுங் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள். அதனால், அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் கதைகள் மூலமாகவும், சூடான வார்த்தைகள் மூலமாகவும் ஆதரவாளர்களை உசுப்பேத்திக் கொண்டிருப்பதே வழியாகுமென்று இரு கட்சிகளும் நாடகமாடிக் கொண்டிருக்கின்றன.


இவ்வாறு இரு கட்சிகளின் தலைவர்களும் கட்சியின் ஆதரவளர்களிடையே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எங்களுக்கும் தொடர்புகளில்லை என்றும்,  பிளவுகள், முரண்பாடுகள் உள்ளது போன்று காட்டிக் கொண்டாலும், உண்மையில் அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது பெரும் நாடகமாகும். 


இந்த யதார்த்தத்தை உணர்ந்து அவர்களுக்கு ஆணை வழங்கியவர்களே அவர்களிடம் கேள்வி எழுப்புதற்கு முழு உரித்தும் உடையவர்கள் என்ற புரிதல் ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அந்தப் புரிதலின் அடிப்படையில் உhயி செயற்பாhடுகள் முன்னெடுக்கப்படாத வரையில் ஏமாற்றும் தலைமைகளும், நாடகமாடும் பிரதிநிதிகளும் தமது செயற்பாடுகளை முடிவின்றி தொடர்ந்து வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பார்கள்.

Virakesari 04.04.2021

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய